Kidny

Kidny

தினேஷ் சந்திமாலின் கேப்டன்ஷிப் என்னை பிரமிக்க வைக்கிறது. சங்ககார.


பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தினேஷ் சந்திமலின் தலைமை பிரமிக்க வைத்துவிட்டதாக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

தோல்வியால் சொந்த இரசிகர்களினாலேயே எதிர்ப்புகளை சந்தித்த இலங்கை
அணி, பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் தலைநிமிர்ந்துள்ளது.

அத்தோடு தோல்வியால் துவண்டு போயிருந்த இலங்கை அணிக்கு இந்த வெற்றி புத்துணர்வு அளித்துள்ளது.

இந்நி லையில் இதுகுறித்து ஜாம்பவான் குமார் சங்கக்கார கூறுகையில்,

"இலங்கை அணிக்கு இது தகுதியான வெற்றியாகும். சந்திமலின் சிறப்பான தலைமையின் கீழ் இலங்கை கடுமை யாக உழைத்தது. ரங்கன மற்றும் தில்ரு வானின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் சந்திமால் அழுத்தத்தை எதிர்கொண்ட விதம் சிறப் பாக இருந்தது.

சந்திமலின் தலைமை பிரமிப்பாக இருந்த அதே சமயத்தில், பொறுப்பை உணர்ந்து துடுப்பாட்டத்தில் அவர் சிறப் பாக செயற்பட்டது பாராட்டுக்குரியது. சந்திமல் டெஸ்ட் கிரிக்கெட் போன்றே ஒருநாள், t20  போட்டிகளிலும் அணிக்காக விளையாட வேண்டும்.

அவரின் முழு திறமையை இனித் தான் நாம் பார்க்க போகிறோம்.
டெஸ்ட் போட்டியில் 10,000 ஒட்டங்களை சந்திமல் குவிப்பார் என நம்புகின்றேன்" என கூறினார்.

தினேஷ் சந்திமாலின் கேப்டன்ஷிப் என்னை பிரமிக்க வைக்கிறது. சங்ககார. தினேஷ் சந்திமாலின் கேப்டன்ஷிப் என்னை பிரமிக்க வைக்கிறது. சங்ககார. Reviewed by Madawala News on 10/12/2017 04:55:00 PM Rating: 5