Kidny

Kidny

மாணவி சந்தியா பார்த்திபன் 189 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

இன்று வெளியாகிய 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில்
திஃஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி சந்தியா பார்த்திபன் 189 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.இரண்டாம் இடத்தை கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் அக்மல் அமாத் அகமட் 186 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் மூன்றாம் இடத்தை திஃஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் இருவர் ஒரே அளவு புள்ளிகளைப் பெற்றுள்ளனர் மதுசாலினி ரஜனபவன் மற்றும் அக்ஷிகா மணிமாறன் 184 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

1ம் மற்றும் 3ம் இடங்களைப் பெற்ற மாணவிகளை கற்பித்த தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியை தயாளினி பரமானந்தம் அவர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவிக்கின்றது.இப்பாடசாலையில் மொத்தமான இவ்வாண்டு 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை கல்வி வலயத்தில் இவ்வாண்டு 2100 பேர் பரீட்சைக்கு தோற்றியதில் 235 பேர் சித்தியடைந்துள்ளனர்.மேலும் கிண்ணியா கல்வி வலயத்தில் 1700 மாணவர்கள் தோற்றியதில் 51 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.மூதூர் வலயம் 2000 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றியதில் 106 மாணவர்கள் சித்தியடைந்தள்ளனர்.

பாடசாலை ரீதியாக சித்தியடைந்துள்ளோர் விபரம் பின்வருமாறு திஃஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 41 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். சென் மேரிஸ் கல்லூரி 26 மாணவர்கள் சித்தியடைந்தள்ளனர்.புனித சூசையப்பர் கல்லூரி 11 மாணவர்களும் உவர்மலை விவேகானந்தா கல்லூரி 19 மாணவர்களும் சாஹிரா கல்லூரி 10 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.என திருகோணமலை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சு.கணேசலிங்கம் தெரிவித்தார்.
மாணவி சந்தியா பார்த்திபன் 189 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம். மாணவி சந்தியா பார்த்திபன் 189 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம். Reviewed by Madawala News on 10/05/2017 02:09:00 PM Rating: 5