Kidny

Kidny

முஸ்லிம் வர்த்தகரின் கோடிக்கணக்கான ரூபா பெறுமதி கொண்ட இரத்தினக்கல்லை திருடிய கும்பல் சிக்கியது.


கோடிக்கணக்கான ரூபா பெறுமதி கொண்ட இரத்தினக்கல் திருட்டுச் சம்பவமொன்றில் விடுதலைப் புலிகளின்
முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்  இரத்தினக் கல் வர்த்தகர் ஒருவர் தன் வசம் இருந்த பெறுமதியான ப்ளூசபயர் வகை இரத்தினக் கல் ஒன்றை பட்டைதீட்ட கொழும்பில் உள்ள நிறுவனமொன்றில் ஒப்படைத்துள்ளார்.

அதன் சந்தைப் பெறுமதி இரண்டு கோடியே பதினொரு இலட்சம் ரூபா என்று தெரிவிக்கப்படுகின்றது.

பட்டைதீட்டும் நிறுவனத்தில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை திருடிய குழுவொன்று விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், பயங்கரவாத தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில் குறித்த கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான வெலேரியன் ஜான்சன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ஜான்சனின் மாமா பெரியதம்பி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவர்களுக்கு ஒத்தாசையாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் சதாசிவம் உதயகுமார் மற்றும் கலீல் ரகுமான் நவ்பர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 20ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முஸ்லிம் வர்த்தகரின் கோடிக்கணக்கான ரூபா பெறுமதி கொண்ட இரத்தினக்கல்லை திருடிய கும்பல் சிக்கியது. முஸ்லிம் வர்த்தகரின் கோடிக்கணக்கான ரூபா பெறுமதி கொண்ட இரத்தினக்கல்லை திருடிய கும்பல் சிக்கியது. Reviewed by Madawala News on 10/18/2017 07:24:00 AM Rating: 5