Ad Space avaiable

வாகனம் ஒட்டிய சவூதி பெண்ணுக்கு அபராரதம். பொறுமை காக்குமாறும் வேண்டுகோள்.


பெண்களுக்கு வாகனம் ஒட்டு வதற்கு உள்ள தடையை சவூதி அரேபியா நீக்குவதற்கு திட்டமிட்டி ருக்கும் நிலையில்  வாகனம் ஒட்டிய   பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரியாதில் உள்ள ஆடம்பர ஹோட் டலுக்கு வெளியில் பெண் ஒருவர் கார் ஒட்டுவது வீடியோவில் தெரிந்ததை அடுத்து அந்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண் கைது செய்யப்படாத போதும் அவர் மீது அபராதம் விதிக் கப்பட்டதாக சவூதி பொலிஸ் பேச் சாளர் குறிப்பிட்டுள்ளார்.

"பெண்கள் வாகனம் ஒட்ட உள்ள தடை உத்தி யோகபூர்வமாக நீக்கப்படும் வரை பொறுமை காக்கும்படியும்  அனைத்து சவூதி பிரஜைகளும் சட்டத்தை மதிக் கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த பேச்சாளர் குறிப்பிட் டுள்ளார்.

குறித்த வாகனத்தின் உரிமையாளருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக வேறாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

மன்னரின் ஆணையின் கீழ் பெண் களுக்கு வாகனம் ஒட்ட அனுமதிக்க சவூதி கடந்த மாதம் வரலாற்று முக்கியம் வாய்ந்த அறிவிப்பொன்றை வெளியிட்டது.

இந்த ஆணை வரும் ஜூன் மாதத்தில் அமுலுக்கு வரவுள்ளது. பெண்களுக்கு வாகனம் ஒட்ட தடை உள்ள உலகின் ஒரே நாடு சவூதி என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனம் ஒட்டிய சவூதி பெண்ணுக்கு அபராரதம். பொறுமை காக்குமாறும் வேண்டுகோள். வாகனம் ஒட்டிய சவூதி பெண்ணுக்கு அபராரதம். பொறுமை காக்குமாறும் வேண்டுகோள். Reviewed by Madawala News on 10/11/2017 08:46:00 AM Rating: 5