Kidny

Kidny

பரீட்சை முடிவுகள் எதிர்க்காலத்தை தீர்மானிப்பதில்லை.

எதிர்வரும் ஒரு சில நாட்களிலே ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாக இருக்கின்றது


 நம் நாட்டை பொறுத்தவரையில் பாடசாலைக் கல்வி எனும் போது ஒரு பிள்ளை தேசிய ரீதி.யிலான மூன்று பரீட்சைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது

இம்மூன்று பரீட்சைகளும் 5ந் தர புலமைப் பரிசில் பரீட்சை இப்பரீட்சை தேசிய ரீதியிலான முதலாவது பரீட்சை இதனை பெற்றோர்களின் பரீட்சை என இன்னொரு வகையில் கூறலாம்


5ந் தர புலமைப் பரிசில் பரீட்சையினது நோக்கம் யாதெனில் கிராமபுற பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகள் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகள் என இவர்களுக்கும் உயர் கல்லூரிகளில் கல்வி கற்கலாம் என்பதே.


அதற்காக இம்மாணவர்கள் தரம் மூன்றிலிருந்தே தயார்படுத்தப்பட்டு பரீட்சைக்கு முகங்கொடுக்கிறார்கள்.

இம்மாணவர்களுக்காக பாடசாலையிலே பகுதி நேர வகுப்புகள், பாடசாலை அல்லாத நேரங்களில் வெளிவாரி வகுப்புகள் என பிள்ளைகளை அனுப்பி அவர்களின் பின்னால் பெற்றோரும் அலைந்து எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்களும் நேரம் காலம் பாராது பாடுபட்டு, பிள்ளைகள் உணவு உறக்கம் மறந்து அலைந்து திறிந்து இறுதியாக இரண்டே மணித்தியாலங்கள் பரீட்சைக்காக அமர்த்தப்படுகின்றனர் சிறார்கள்.


எனவே பரீட்சையை முடித்துவிட்டு பெறுபேறுகளை எதிர்ப்பார்த்தவர்களாக சின்னஞ் சிறார்கள் ஒரு புறம், ஆசிரியர்கள் இன்னொரு புறம், பெற்றோர்கள் வேறு புறம்.


பெறுபேறுகள் எப்படி வந்தாலும் அதாவது சித்திடையலாம் அல்லது சிததியடையாமல் இருக்கலாம் எதனையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் முதலில் பெற்றோரிடம் வர வேண்டும்,
               

 பிறகு பிள்ளைகளுக்கு தைறிய மனப்பான்மையை, எதனையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்து விட வேண்டும்.
                   

 நாம் காலங்காலமாக செவியுரும் ஒரு விடயம்தான் தான் எதிர்ப்பார்த்த பெறுபேறுகள் வரவில்லை என ஆத்திரங் கொண்ட பெற்றோர் பிஞ்சுகளை வசைபாடுவதும், அடிப்பதும், அடுத்தவர் முன்னால் பிள்ளைகளை அவமதிப்பதும், அடுத்த பிள்ளைகள் முன்னால் தன் பிள்ளையை மட்டந்தட்டுவதும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்
           

    இப்பெறுபேறுகளினால் பிள்ளைகளின் கல்வி நிலையில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதும், பிள்ளைகள் தோழ்வியை தாங்க முடியாமல் மனநிலை பாதிக்கப்படுவது, தாழ்வு மனப்பான்மை என்று பல விடயங்களை பத்திரிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டுமிருக்கிறோம்
               

இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் பெற்றோர் இவற்றிலிருந்து கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டும் குழந்தைகள் ஒருபோதும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்.
             

ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் பிள்ளைகளுக்கு எவ்வளவு தான் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களால் உள்வாங்க முடியுமானளவைத்தான் வாங்கிக் கொள்வார்கள்.
             

 எனவே 2017 அதாவது இவ்வருடத்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்பட இருக்கின்றது.
                   

 எம்மில் முடியுமானவர்கள் எம் குழந்தைகளுக்காக ஒரு சிறு பரிசுப் பொருட்களையாவது அன்பளிப்புச் செய்து தட்டிக் கொடுப்போம்
                   

 பாராட்டப்படும் குழந்தைகள் நாளை பாராட்டுக்குறியவர்களாகவும், தாழ்த்தப்படும் குழந்தைகள் நாளை தாழ்த்தப்படுபவர்களாகவும் தான் நாம் காணமுடியும்,


என்பதை கருத்திற் கொண்டு, இம்முறை பரீட்சை எழுதிய எல்லாப் பிள்ளைகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தியவர்களாக..

Rinoza GulKhan
(Rinu Rinu)
பரீட்சை முடிவுகள் எதிர்க்காலத்தை தீர்மானிப்பதில்லை. பரீட்சை முடிவுகள் எதிர்க்காலத்தை தீர்மானிப்பதில்லை. Reviewed by Madawala News on 10/03/2017 04:37:00 PM Rating: 5