Kidny

Kidny

கட்டிடவேலைகள் முடிவதற்கு முன்னறே கட்டிடம் உடைந்தது. முஸ்லிம் வித்தியாலயம் ஒன்றில் அவலம்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள வாணாறு ஆயிலியடி முஸ்லிம் வித்தியாலய கழிவரை கட்டிடத் தொகுதி ஒன்று  ஒப்பந்தம் முடியும் முன்னர் கொங்கிறீட் மேல் தட்டு உடைந்து சேதமடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றனர்.


கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட வாணாறு ஆயிலியடி முஸ்லிம்  கொலனி முஸ்லிம் வித்தியாலயத்துக்கு கல்வி அமைச்சின் மூலமாக  சகலவசதிகளுடனான ஆண்,பெண் இருபாலாருக்குமான கழிவரை கட்டிட தொகுதி ஒன்றை பளிங்குகல் பதித்து அமைப்பதற்கு ரூபாய்  12 இலட்சம்  ஒதுக்கீடு  செய்யப்பட்டிருந்தது.


 இந்த ஒப்பந்த வேலை  முடியும் முன் ஒப்பந்தக்காரரின் கட்டிட ஒழுங்கு  இன்மையால் அதன் கூரைக்கு போடப்பட்ட  கொங்றீட் தட்டு உடைந்து விழுந்து  விட்டது,


 இந்த தரமற்ற கட்டிட நிர்மானம் சம்மந்தமாக கிண்ணியா வலயக்கல்வி பணியகத்துக்கும்,மாகாண  கல்வி திணைக்களத்துக்கும் ,இத்திட்டத்தை பார்வையிடும் பொறியியலாருக்கு அறிவித்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்  மேல் கொங்றீட் தட்டுக்கு பதிலாக  தகரம் பொருத்தப்படுவதாகவும் இப்பாடாசாலை ஒரு பின்தங்கிய  கிராமத்து பாடசாலை என்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகான்றனர்.

கட்டிடவேலைகள் முடிவதற்கு முன்னறே கட்டிடம் உடைந்தது. முஸ்லிம் வித்தியாலயம் ஒன்றில் அவலம். கட்டிடவேலைகள் முடிவதற்கு முன்னறே கட்டிடம் உடைந்தது. முஸ்லிம் வித்தியாலயம் ஒன்றில் அவலம். Reviewed by Madawala News on 10/16/2017 01:31:00 PM Rating: 5