Kidny

Kidny

கடன் தொல்லை... பிள்ளைகள் மூவருக்கு ஐஸ்கிரீமில் விசத்தை கலந்து கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை.


தாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர் தற்கொலை செய்து கொண்டுள்ள  சம்பவம் பிரதேசத்தில்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியாலை ஏ.வி. ஒழுங்கை சேர்ந்த சுநேத்திரா (28), கர்சா(4), சஜித் (2), சரவணா(2) என்பவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தனது மூன்று பிள்ளைகளுக்கும் உணவில் விஷத்தை கலந்து சாப்பிடக் கொடுத்த தாய், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் சில மாதங்களுக்கு முன்னர் பண பிரச்சினையால் தங்க ஆபரணங்களுக்கு கலவை செய்யப்படும் ஒருவகை திரவத்தை அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை உயிரிழந்த பின்னர் தாய் புதல்வர்கள் இருவர் மற்றும் புதல்வியும் வாழ்ந்து வந்துள்ளனர்.

இன்று முற்பகல்  ஐஸ்கிரீம் இல் விசத்தை  கலவை செய்து பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளதுடன், தாய் உணவில் விசத்தினை கலந்து உட்கொண்டு இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் நுண் கடன் தொல்லையால் பலர் மனஉழைச்சலுக்குள்ளாகி வருவதாகவும், இவ்வாறு கடன் வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக அமைப்புகள் கோரிவருகின்றன.

இவ்வாறான நிலையில், இன்று இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பாருக் சிஹான்-


கடன் தொல்லை... பிள்ளைகள் மூவருக்கு ஐஸ்கிரீமில் விசத்தை கலந்து கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை. கடன் தொல்லை... பிள்ளைகள் மூவருக்கு ஐஸ்கிரீமில் விசத்தை கலந்து கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை. Reviewed by Madawala News on 10/27/2017 04:19:00 PM Rating: 5