Ad Space avaiable

ஜமாத்தில் சென்ற வேளை நீரில் மூழ்கி பாஹீம் முகம்மட் (20வயது) வபாத்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கந்தளாய் பிரதேசத்திற்கு மார்க்க கல்வியை கற்பதற்காக ஜமாத்தில்  வருகை தந்திருந்த இளைஞர்கள் குளத்திற்கு குளிக்க சென்ற வேளை நீரில் மூழ்கி இன்று (12) காலை இளைஞனொருவர் வபாத்தாகியுள்ளதாக கந்தளாய் தலைமயைபொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனை-பாண்டியிருப்பு பகுதியைச்சேர்ந்த முகம்மட் ஜவ்பர் பாஹீம் முகம்மட் (20வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞனின் ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜமாத்தில் சென்ற வேளை நீரில் மூழ்கி பாஹீம் முகம்மட் (20வயது) வபாத். ஜமாத்தில் சென்ற வேளை நீரில் மூழ்கி பாஹீம் முகம்மட் (20வயது) வபாத். Reviewed by Madawala News on 10/12/2017 02:03:00 PM Rating: 5