Kidny

Kidny

கண்டி, தெல்தோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத்தினரை தாக்கியவர் 19ம் திகதி வரை சிறைவைப்பு. 3 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவு.



SLTJ கண்டி மாவட்டம், தெல்தோட்டை கிளையினால்  06-10-2017 அன்று குர்ஆன் சுன்னா அடிப்படையிலான
ஜும்மா ஆரம்பிக்கப்பட்டது. குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஜும்மா நடைபெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இதற்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள்.

கிளை நிர்வாகிகளை பள்ளிவாயலுக்கு அழைத்து 06 பேர் கொண்ட ஒரு குழு ஜும்மா தொழுகையை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்தது.

அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சி செயல்படும் தவ்ஹீத் சகோதரர்கள் ‘எக்காரணம் கொண்டும் ஜும்மாவை நிறுத்த முடியாது” என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கம் அதன் தூய வடிவில் சொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்ற முழு முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அடுத்த ஜும்மா நடக்க விடாமல் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்கள்.  ஜமாஅத்தின் தாயி உரை நிகழ்த்த கிளை மர்கஸிற்கு வர முடியாதளவிற்கு பாதையில் தாயியையும், ஜும்மாவிற்கு வரக்கூடிய பொது மக்களையும் தாக்குவதற்காக ஊர் பள்ளியினால் ஏவப்பட்ட ரவ்டிகள் பலர் கிளை மர்கஸ் பாதையை மறைத்த படி இருந்தார்கள்.

இறுதியில் கிளை செயலாளர் சகோ. காண் அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார்கள். ஜும்மா குர்ஆன் சுன்னா அடிப்படையில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஜும்மா முடிந்த பின் சுமார் 2.30 மணியளவில் கிளை செயலாளர் சகோ.கான் அவர்கள் பதினைந்து போர் கொண்ட ரவ்டிகள் கும்பலினால் மறிக்கப்பட்டு தாக்கப்பட்டார். அத்துடன் அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஜமாஅத்தின் கிளை செயலாளர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பிரச்சினை தொடர்பில் SLTJ கண்டி மாவட்ட நிருவாகம் சார்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தாக்குதல் நடத்தியவர்களின் மிக முக்கியமான நான்கு நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் கடந்த திங்கள் கிழமை கண்டி நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படுத்த பட்டார். தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரனி காமினி மன்றில் ஆஜரானார்.

வழக்கை விசாரனை செய்த நீதிபதி அவர்கள் எதிர்வரும் 19ம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியளில் வைக்க உத்தரவிட்டதோடு மற்ற மூவரையும் உடனடியாக கைது செய்யும்படி கலஹா போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

வழக்கு மீண்டும் எதிர்வரும் 19ம் தேதி விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கிறது.

சத்தியக் கொள்கைக்கு என்றும் இறைவனின் உதவியுண்டு என்ற அடிப்படையில் சத்தியக் கொள்கையை நிலைநாட்டும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணி அல்லாஹ்வுக்கு மாத்திரமே அஞ்சி தொடர்ந்தும் தெல்தோட்டை பகுதியில் வீரியமாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்: SLTJ ஊடக பிரிவு 
-SLTJ கண்டி மாவட்டம்.
கண்டி, தெல்தோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத்தினரை தாக்கியவர் 19ம் திகதி வரை சிறைவைப்பு. 3 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவு. கண்டி, தெல்தோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத்தினரை  தாக்கியவர் 19ம் திகதி வரை சிறைவைப்பு. 3 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவு. Reviewed by Madawala News on 10/18/2017 02:06:00 PM Rating: 5