Kidny

Kidny

கைப்பற்றப்பட்ட ஆயுத வாகனம்.. சந்தேக நபர்கள் இவர்கள் தான்.



கம்பஹா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேக நபர்களை அடையாளங் காண்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


கம்பஹா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைபிரிட் காரிலிருந்து டீ 56 ரக துப்பாக்கிகள் மூன்றை  நேற்று மீட்ட பொலிஸார்,  இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர், மேற்படி காரை பன்னிப்பிட்டியவிலிருந்து வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சமிதிபுர மட்டக்குளியவைச் சேர்ந்த அசங்க சம்பத் குமார என்ற முதலாம் சந்தேக நபரினதும்,  உடஹமுல்ல, அமரதுங்க மாவத்தையைச் சேர்ந்த தாரக உயங்க என்ற இரண்டாம் சந்தேக நபரினதும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர்களை கைதுசெய்வதற்காக, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், கம்பஹா பிரதான பொலிஸ் பரிசோதகர் 0178591611, கம்பஹா பொலிஸ் நிலையம்

 033-2222226 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறியத்தருமாறும் கோரியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுத வாகனம்.. சந்தேக நபர்கள் இவர்கள் தான். கைப்பற்றப்பட்ட ஆயுத வாகனம்.. சந்தேக நபர்கள் இவர்கள் தான். Reviewed by Madawala News on 10/03/2017 11:24:00 PM Rating: 5