Kidny

Kidny

யாரும் அச்சமடைய வேண்டாம்.. முக்கிய தேரர்களை சந்தித்து பிரதமர் ரணில் அளித்த விளக்கம் இதுதான்.


புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை குறித்து அச்சம் கொள்ளத் தேவை­யில்லை.
அது இடைக்­கால அறிக்கை மாத்­தி­ர­மே­யாகும். எனினும் பாரா­ளு­மன்­றத்தில் நடத்­த­வுள்ள விவா­தத்தின் பின்­னரே புதிய அர­சி­ய­ல­மைப்பின் அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து அர­சாங்கம் தீர்­மானம் எடுக்கும். மேலும் விவா­தத்தின் பின்­னரே மா­நா­யக்க தேரர்­க­ளையும்  அறி­வு­றுத்­த­வுள்ளோம் என தம்­பர அமில தேரர் தலை­மை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான மக்கள் அமைப்­பு­ட­னான நேற்­றைய சந்­திப்பின் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய உள்­ளிட்­ட­பெ­ளத்த மகா­நா­யக்க பீடங்­க­ளுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அறி­வு­றுத்த நட­வ­டிக்கை எடுக்­கவும் இதன்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எழுந்­துள்ள பிரச்­சி­னைகள் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தம்­பர அமில தேரர் தலை­மை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான மக்கள் அமைப்­பினர் நேற்று மாலை அலரி மாளி­கையில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இதன்­போது அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது.

இந்த சந்­திப்பின் போது இடை­கால அறிக்கை தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிக்­கு­க­ளுக்கும் சிவில் அமைப்­பி­ன­ருக்கும் உண்மை நில­வ­ரத்தை தெளி­வுப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ள­தா­வது,

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை தொடர்பில் அச்சம் கொள்ள தேவை­யில்லை. அது இடைக்­கால அறிக்கை மாத்­தி­ர­மே­யாகும். புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று இன்னும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அர­சி­ய­ல­மைப்­பிற்­கான வரைபு கூட இன்னும் தயா­ரா­க­வில்லை. அர­சி­ய­ல­மப்­பிற்­கான இடைக்­கால அறிக்கை தொடர்பில் தற்­போது மக்கள் மத்­தி­யிலும் பிக்­குகள் மத்­தி­யிலும் கருத்­துகள் பரி­மா­றப்­பட்டு வரு­கின்­றன. இந்த கருத்­தாடல் எமக்கு முக்­கி­ய­மாகும். நாம் அதனை எதிர்­பார்க்­கின்றோம். இதன்­மூ­லமே புதிய அர­சி­ய­ல­மைப்­பினை எமக்கு தயா­ரிக்க முடியும்.

ஆகவே நாம் இடைக்­கால அறிக்கை தொடர்பில் பர­வ­லான கருத்து பரி­மாற்­றத்தை விரும்­பு­கின்றோம். இதன்­படி பாரா­ளு­மன்­றத்தில் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.இந்த விவாத்தின் பின்­னரே அர­சி­ய­ல­மைப்பு குறித்து உறு­தி­யான நிலை­மைக்கு வர முடியும். எனவே விவா­தத்தின் பின்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பின் அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து தீர்­மானம் எடுப்போம். மேலும் விவா­தத்தின் பின்னர் மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் விரி­வான தெளிவை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது என பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை இந்த சந்­திப்­பின்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் மகா­நா­யக்க தேரர்­க­ளுக்கும் பிக்­கு­க­ளுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் அறி­வு­றுத்த வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்த சந்­திப்பின் போது தம்­பர அமில தேர­ருடம் தமது நிலைப்­பாட்டை பிர­த­ம­ரிடம் எடுத்­து­ரைத்­துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி முறைமையை நீக்கியே ஆக வேண்டும். அத்துடன் மக்கள் ஏற்றுக்கொள்ளதக்க அதிகார பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். மக்கள் இதற்கே ‍ஆணை வழங்கியுள்ளனர். எனவே மக்களின் ஆணையை மீறி செயற்பட வேண்டாம் என பிரதமரிடம் ஆணித்தரமாக கூறினோம் என்றார்.
யாரும் அச்சமடைய வேண்டாம்.. முக்கிய தேரர்களை சந்தித்து பிரதமர் ரணில் அளித்த விளக்கம் இதுதான். யாரும்  அச்சமடைய வேண்டாம்.. முக்கிய தேரர்களை சந்தித்து  பிரதமர் ரணில் அளித்த விளக்கம் இதுதான். Reviewed by Madawala News on 10/27/2017 10:51:00 AM Rating: 5