Ad Space Available here

ஆசிரியர் தினம்: சிந்திக்க சில வரிகள்.

காலையிலேயே பதிவிட நினைத்ததுதான். ஆசிரியர் தினம் கொண்டாடி பரஸ்பரம் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டிருந்த
அன்பர்களின் உற்சாகத்துக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என நினைத்ததால் பதியவில்லை. I didn’t want to spoil the moment. 


ஆனால், நிச்சயம் தெளிவு படுத்தப்பட வேண்டிய சில விஷயங்களை இத்தருணத்தில் பகிர்ந்துகொள்வதே காலோசிதம் எனக் கருதுகிறேன். 
கண்ணாடி அறையிலிருந்து கல்லெறிவதாக ஒரு சிலர் என்னை விமர்சிக்கக் கூடும். 


(Well, ஒரு வகையில் அப்படியும் வைத்துக் கொள்ளலாம். என்ன செய்வது, எனக்கு அந்த சாகசம் நிரம்ப பிடித்திருக்கிறதே!)  

மன்னிக்கவும். ஆசிரியர் தினம் என்ற பெயரில் இங்கு நடக்கும் கூத்துகளைக் காணச் சகிக்க முடியவில்லை. 


மந்தை மனோநிலையில் நின்றுகொண்டு முற்றிலும் வணிகமயப் படுத்தப்பட்ட ஜஸ்ட் இன்னுமொரு தினமான இந்த ஆசிரியர் தினத்தை ஏதோ பெரியதொரு சமூகக் கடமையாய்க் கருதி ‘மெழுகுவர்த்தி’, ‘ஆசு இரியர்’ என அரதப்பழசான தேய்வழக்கு உவமைகள், கவிதைகள், வாழ்த்துகளுடனும், ரிப்பன் கட்டிய souvenirகள், பரிசுப் பொதிகளுடனும் கூட்டத்தோடு கூட்டமாய்க் கோலாகலமாகக் கொண்டாடி, செவ்வனே தமது குருபக்தியைக் காட்டிவிட்டு கடந்து செல்லும் லட்சோபலட்ச மாந்தர்களில் எத்தனை பேருக்கு உண்மையாகவே ஆசிரியப் பணி குறித்த தெளிவு இருக்கிறது? 


இதில் கல்விப்புலத்திலிருப்பவர்களும் விதிவிலக்கல்ல. தமது இளமைப் பருவத்தில் இலவசக்கல்வியின் உச்சப் பயனையும் அனுபவித்துவிட்டு இன்று தெருவுக்குத்தெரு ட்யூஷன் வகுப்புகளையும், காசு பிடுங்கும் இன்ஸ்டிட்யூட்களையும்  எந்த அடிப்படை நியமங்களுமற்ற காமாசோமா இன்டர்நேஷனல் ஸ்கூல்களையும் நிறுவி, கல்விக்கடை விரித்திருக்கும் வியாபாரிகளையும், அவர்தம் அல்லக்கைகளாய் விளங்கும் அரசுப் பணி ஆசிரியர்ளையும் நோக்கியே இந்தக் கேள்விக் கணையைத் தொடுக்கிறேன். 


சேவை வழங்குநர்-பெறுநர் என்ற இரு சாராருமே ஆசிரியப் பணிக்கான மரியாதையை சிதைத்து விட்டு, அந்த ஒற்றை நாளில் மாத்திரம் செயற்கையாக ஆசிரிய சேவையைக் கொண்டாடுவதைக் காணும் போது எரிச்சலே மிஞ்சுகிறது. 

மதிப்புக்குரிய ஆசிரியப் பெருந்தகைகளே, ஆசிரியப் பணி ஒரு professionதான், சந்தேகமே வேண்டாம். ஆனால், ஆசிரியத் தொழிலுக்கேயுரிய professional ethics உள்ளன என்பதை மறவாதீர்கள். 
வாண்மை விருத்தி எய்துங்கள், வருமானம் ஈட்டுங்கள் - ஆனால் விலை போகாதீர்கள். 
Yes. Sell your brawn and brain to the highest bidders; but never put a price tag on your heart and soul. 

விழுமியங்களில் நின்று ஒழுகாது, வெறுமனே போலித்தனமான கொண்டாட்டங்கள் வழி எந்த விதமான சிறப்பையும் எய்த முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மேடை போட்டு, விழா எடுத்து, முகஸ்துதிகள் மூலம் உயிர்த்திருக்க இது ஒன்றும் அரசியல் அல்ல, ஆசிரியம்.

கருத்து: ரிம்ஸான் அமானுல்லாஹ் (இ.க.நி.சே. iii) 
ஆசிரியர் தினம்: சிந்திக்க சில வரிகள். ஆசிரியர் தினம்: சிந்திக்க சில வரிகள். Reviewed by Madawala News on 10/06/2017 08:06:00 PM Rating: 5