Kidny

Kidny

இந்த நாட்டின் ஜனாதிபதியாக, பிரதமராக முஸ்லிம் அல்லது தமிழர் ஒருவரை நியமிக்கவும். நாங்கள் அதற்கு எதிர்ப்பில்லை.


சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவது தொடர்பில் எதுவித பிரச்சினையும்
இல்லை என்று மெதகொட அபேதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர் கூறியதாவது,

இந்த நாட்டை யாருக்கு வேண்டுமானாலும் பொறுப்பேற்கலாம். ஆனால் நாட்டை பிரிக்க முடியாது. சிறுபான்மையினராக இருந்தாலும் வாக்குப்பலத்தால் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவியேற்கலாம்.

இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் தமது அதிகாரங்களை கைவிட்டு தமிழ் தலைவர் ஒருவருக்கு முழு அதிகாரத்தையும் வழங்குங்கள். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

இந்த நாட்டில் தமிழ் தலைவர் ஒருவரோ அல்லது முஸ்லிம் தலைவர் ஒருவரோ நியமிக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பல்ல.

ஆனால் எமக்கிருக்கின்ற பிரச்சினை இந்த நாட்டை பிராந்தியங்களாக பிரித்து நாசமாக்குவது தொடர்பிலேயே.

இந்த நாட்டில் சுதந்திர போராட்டத்தின் போது சிங்கள மக்கள் மாத்திரம் அல்லாது ஏனைய சமூகத்தினரும் சேர்ந்தே பாடுபட்டார்கள்.

அதேபோல் இந்த நாட்டில் சிங்களம் அல்லாத காரணத்தால் எவராவது ஒரு நபருக்கு சிங்களவர்கள் அனுபவிக்கும் எந்தவொரு வரப்பிரசாங்களாவது கிடைக்காதிருந்தால் அதனை அவர்களுக்கு வழங்க நாங்கள் தயார் என்றும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக, பிரதமராக முஸ்லிம் அல்லது தமிழர் ஒருவரை நியமிக்கவும். நாங்கள் அதற்கு எதிர்ப்பில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக, பிரதமராக முஸ்லிம் அல்லது தமிழர் ஒருவரை நியமிக்கவும். நாங்கள் அதற்கு எதிர்ப்பில்லை. Reviewed by Madawala News on 10/25/2017 02:20:00 PM Rating: 5