Kidny

Kidny

முச்சக்கர வண்டி - எரிபொருள் டேங்கர் நேருக்கு நேர் மோதி, பெண்ணொருவர் உட்பட மூவர் பலி.


இரத்தினபுரி -கொழும்பு பிரதான வீதியின் குருவிட்ட, புஸ்ஸெல்ல பிரதேசத்தில் இன்று மதியம் முச்சக்கர
வண்டியும் பௌசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற எரிபொருள் ஏற்றிய பாரவூர்தியும் முச்சக்கரவண்டியுமே மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளன.

பரக்கடுவ போதிமாலுவே பிரதேசத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி - எரிபொருள் டேங்கர் நேருக்கு நேர் மோதி, பெண்ணொருவர் உட்பட மூவர் பலி. முச்சக்கர வண்டி -  எரிபொருள்  டேங்கர் நேருக்கு நேர் மோதி, பெண்ணொருவர் உட்பட மூவர் பலி. Reviewed by Madawala News on 10/26/2017 06:58:00 PM Rating: 5