Kidny

Kidny

ஜனாதிபதி செயலாளருடனான பேச்சுவார்த்தை வெற்றி. ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது.



புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஜனாதிபதி செயலாளருடன் சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

இன்று காலை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்தே இந்த சந்திப்பு நடைபெற்றது. 

முன்னதாக புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு தீர்மானித்திருந்த நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பை மேற்கொள்ள புகையிரத தொழிற்சங்கங்கள் வாய்ப்பை கோரியிருந்தன. 

எனினும். இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலாளருடனான பேச்சுவார்த்தை வெற்றி. ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. ஜனாதிபதி செயலாளருடனான பேச்சுவார்த்தை வெற்றி. ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. Reviewed by Madawala News on 10/12/2017 06:48:00 PM Rating: 5