Ad Space avaiable

அமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வி.. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும். ( ஒய்வுபெற்ற பணியாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு)


போக்குவரத்து அமைச்சருக்கும் புகையிரத சாரதிகள் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை இன்று முற்பகல் 9.30 முதல் இடம்பெற்று வந்த நிலையில் தற்பொழுது நிறைவடைந்துள்ளது.

இதன்போது புகையிரத சாரதிகள் சங்கத்தினரால் முன்வைக்ப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவிலலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சாரதிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத சாரதிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையில் கடமையாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்களின் விடுமுறை இரத்துச்சய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒய்வுபெற்ற, ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த ரயில் சாரதிகளையும் மற்றும் காவலர்களையும் உடனடியாக சேவையில் ஈடுபடுமாறு ரயில்வே திணைக்களம் அறிவிப்புவிடுத்துள்ளது.

மேலும் அவ்வூழியர்களை இன்று மதியம் தொடக்கம் சேவையில் ஈடுபடுமாறு அறிவித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது மேலாளர் எஸ்.எம் அபயவிக்ரம தெரிவித்தார்.

அமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வி.. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும். ( ஒய்வுபெற்ற பணியாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு) அமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வி.. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும். ( ஒய்வுபெற்ற பணியாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு) Reviewed by Madawala News on 10/12/2017 01:26:00 PM Rating: 5