Yahya

இங்கிலாந்தில் மிக விமரிசையாக நிகழ்ந்த ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கத்தின் 13 ம் வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும்.


ஆக்கம்: ஷேய்க் முஹம்மது இஸ்மாயில் நளீமி

ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கம், 2005  ம் ஆண்டு முதல், பல்வகையான நலன் புரி வேலைகளை இனம், மதம், பாகு பாடின்றி  மடவளை பஸாரில்  வாழும் மக்களுக்கு  செய்து வருகிறது.

இதன் 13 ம்   பொதுக் கூட்டம் நேற்று இரவு (21/10/2017) சிலாவ் நகரில் அமைந்துள்ள ஜன்னத் பள்ளிவாயலில் மிக விமரிசையாக இடம் பெற்றது.


சிறுவன் ஆசிப் தஸ்ரிபின் அல் குர்ஆன்  முறத்தல், சிறுவன் ஸைத் கியாஸின்  ஆங்கில மொழிபெயர்போடு இரவு 8.00 மணிக்கு ஆரம்பமான  வருடாந்த பொதுக்கூட்டம், கடந்த இரு வருடங்களாக பதவியில் இருந்த  நிர்வாக சபைத் தலைவர் பஸ்லி ஷகூர் அவர்களின் தலைமை மற்றும்  வரவேற்பு உரையோடு கலை கட்டியது. ‘தமது நலன் புரி சங்கத்தின் நோக்கம், வேலைத்  திட்டங்கள், அடைவு, இதன் வளர்ச்சிக்கு பாடு படுபவர்கள், பங்களிப்பு செய்வதன் அவசியம் பற்றியம் சுருக்கமாக பேசியதோடு; மடவளை மக்கள் என்று மாத்திரம் இல்லாமல் பல ஊர்களையும் சேர்ந்த சகோதர உள்ளங்களின்  உதவிகள் குறித்தும், அவர்களின் வருகை குறித்தும், சிலாகித்துப் பேசி அவர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்றார்.


செயலாளர் ரிஹான் ஜப்பார் அவர்களின் தெளிவான ஆண்டறிக்கை, பயாஸ் முஹம்மட் அவர்களின் வருடாந்த  கணக்கு என்பன சபையோரால் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு நிர்வாக சபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாக சபை, சபையோரால் தெரிவு செய்யப்பட்டது.

எதிர்  வரக் கூடிய நிர்வாகத்தின்  தலைவராக சகோதரர் ஐயூப் கான் அவர்கள் சபையில் தெரிவானார்.

அங்கத்த தவர்களாக: Fayaz Mohamed, Akram Mansoor, Rizwan Aboobakar, Safraz Shakoor,Faizar Ali Marzook, Ijaas Rafeek  ஆகியோர் சபையோரால் தெரிவு செய்யப் பட்டர்கள்.

புதிய தலைவர் தனது கன்னி உரையில்;  ‘மக்கள் தமது நலன் புரி சங்கத்துக்கு தொடராக உதவி செய்ய வேண்டும், மாதாந்தம் செலுத்தும் சந்தா எமது சங்கத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது’ என்பதை சுட்டிச் சென்றார்.
புதிய நிர்வாகம் சபையோர் முன்னிலையில்  பின்வருமாறு  உறுதி பூண்டு  பதவி எடுக்க கொண்டது. ‘ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கத்தின் யாப்பின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு, மடவளை பஸார் மக்களுக்கு, உண்மையோடும் நாணயத்தோடும்,என்னால் முடிந்த அளவு சேவை செய்வேன்.என்று இந்த சபையோர் முன்னிலையில் எல்லாம் வல்ல இறைவன் மீது சத்தியம் செய்து எனது பதவியை ஏற்றுக் கொள்கிறேன்’


ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கத்தின் ஆலோசனை சபையின் உறுப்பினரும், அதன்  ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் பிரபல பன்னூல் ஆசிரியரும் அரசியல் வாதியுமான ஜனாப் பீ.ஏ.காதர்  அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறு நேரத்தில் ‘ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கத்தின் சாதனைகள் குறித்து சிலாகித்துப் பேசியதோடு, சர்வாதிகார்ப் போக்கற்ற தலைமைத்துவம், ஒழிவு மறைவற்ற தன்மை , குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளும் பண்பு ஆகியன இந்த அமைப்பில் இருப்பதால், இது பல்லாண்டு  காலம் பயணிக்கப் போகின்ற ஒரு அமைப்பாகும்’ என உறுதி கூறினார்.


ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கத்தின் புதிய வேலைத்  திட்டமான ‘அநாதைப் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கு உதவுதல்’ என்ற அம்சத்துக்கு விஷேடமாக நன்கொடைகள் சேகரிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கின்ற  தொடரும் பணிக்கான  நன்கொடைகளும்  கோரபட்டன. அல்லாஹ்வின் அருளால் பல்லாயிரக் கணக்கான தொகையை இந்த நலன் புரி சங்கத்தின் தேவைகளுக்கு தருவதாக  கலந்து கொண்டோர் பலரும் வாக்களித்தனர்.
இறுதியாக நன்றியுரையை ஆங்கில மொழியிலே அருமையாக சகோதர ரஸ்லின் சிராஜ் அவர்கள் நிகழ்த்தினார்.


ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கத்தின் முன்னை நாள் தலைவர்களான  இல்ஹாம் முனவ்வர், ஷெய்க் முகம்மது இஸ்மாயில் (நளீமி), தஸ்லீம் அனீஸ் ஆகியோரின் வழிநடப்பில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டம் சரியாக 10  மணிக்கு துஆ பிரார்தனையோடு நிறைவு பெற்றது .
இங்கிலாந்தில் வாழும் மடவளை பஸார் மக்கள், பிற ஊர்களை சேர்ந்த நலன் விரும்பிகள், கொடை வள்ளல்கள் என 450 க்கும் மேட்பட்டோர் இங்கிலாந்தின்  சகல பக்கங்களிலிருந்தும் கலந்து சிறப்பித்த,  அனைவரும் வயிறார உண்டு மகிழ கூட்ட ஆரம்பத்தில் சிற்றுண்டிக்களும்  இறுதியில் அறுசுவை பிரியாணியும் இராப்  போசனமாக  வழங்கப்பட்டன.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணை, ஜன்னத் பள்ளிவாசலின் வசதிகள், சகோதரர்களின் நேர்த்தியான திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தை மெருகூட்டியது என்றால் மிகையாகாது.இங்கிலாந்தில் மிக விமரிசையாக நிகழ்ந்த ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கத்தின் 13 ம் வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும். இங்கிலாந்தில் மிக விமரிசையாக நிகழ்ந்த ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கத்தின் 13  ம்  வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும். Reviewed by Madawala News on 10/22/2017 11:08:00 AM Rating: 5