Kidny

Kidny

ஒருவர் கொல்லப்பட்ட, விசேட அதிரடிப்படை - கொள்ளையாளர்கள் இடையிலான துப்பாக்கி சூடு சம்பவத்தின் அப்டேட். UNP மாகாண சபை உறுப்பினரும் கைது.


திவுலபிட்டிய சம்பவம் தொடர்பில் காவற்துறையால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் வீட்டில் இருந்து 100 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை , இந்த சம்பவம் தொடர்பில் அவரின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

திவுலிபிட்டிய – துனகஹா – பல்லபான வீதியின் ஹேன்பிட்டகெதர பிரதேசத்தல் காவற்துறையினரின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொள்ளையாளர்கள் சிலருக்கு இடையே இன்று இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூடுகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவும் இதன்போது கைது செய்யப்பட்டார்.

கொள்ளையிடும் நோக்கில் குழு ஒன்று பிரவேசிக்கவிருப்பதாக, காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இதற்கு அமைய வேன் ரக வாகனம் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய வேளையில் அதில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இதன்போது அதிரடிப்படையினர் பதில் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மரணித்தவர் நாவலகே குசான் தக்சில குரே என்பவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் கொல்லப்பட்ட, விசேட அதிரடிப்படை - கொள்ளையாளர்கள் இடையிலான துப்பாக்கி சூடு சம்பவத்தின் அப்டேட். UNP மாகாண சபை உறுப்பினரும் கைது. ஒருவர் கொல்லப்பட்ட, விசேட அதிரடிப்படை -  கொள்ளையாளர்கள் இடையிலான துப்பாக்கி சூடு சம்பவத்தின் அப்டேட். UNP மாகாண சபை உறுப்பினரும் கைது. Reviewed by Madawala News on 10/23/2017 09:15:00 PM Rating: 5