Kidny

Kidny

சென்னையிலிருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலருடன் வந்த இலங்கை பெண் சிக்கினார்.


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100,000 அமெரிக்க டொலர் நாணயங்களுடன் இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த பெண் சென்னையிலிருந்து UL126 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக்கு வந்துள்ளார்.

இதன்போது பெண்ணின் பயணப் பொதியிலிருந்து இந்தப் பணத்தொகை கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் இலங்கைப் பெறுமதி ஒரு கோடி ஐம்பது இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பணத்தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலருடன் வந்த இலங்கை பெண் சிக்கினார். சென்னையிலிருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலருடன் வந்த இலங்கை பெண் சிக்கினார். Reviewed by Madawala News on 10/13/2017 11:42:00 AM Rating: 5