Kidny

Kidny

வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி.. முச்சக்கர வண்டிக்கும் தீ வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிட
முயற்சி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த வீட்டில் யாரும் இல்லாத போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிவதை அயல்வீட்டார் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, வீட்டு உரிமையாளருக்கு இது பற்றி அறிவித்துள்ளனர்.

பின்னர், மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினருக்கு தெரியப்படுத்தப்பட்டு, அங்கு விரைந்த அவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை, வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் அலுமாரிக்குள் இருந்த பொருட்கள் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

எதுஎவ்வாறு இருப்பினும், என்ன கொள்ளையிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தெரியாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி.. முச்சக்கர வண்டிக்கும் தீ வைக்கப்பட்டது. வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி.. முச்சக்கர வண்டிக்கும் தீ வைக்கப்பட்டது. Reviewed by Madawala News on 10/17/2017 10:54:00 AM Rating: 5