Kidny

Kidny

தவுலகல பகுதியில் வீதியோரத்தில் பையொன்றில் மீட்கபட்ட எட்டு கைக்குண்டுகள்.



உடுநுவர வெளிகல்ல   பகுதியில் பாதையோரத்தில் காணப்பட்ட  பையில்  இருந்து எட்டு கைக்குண்டுகள் நேற்று
முற்பகல்  டுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
 வெலிகல்ல - தளவதுரை வீதியில் இன்று முற்பகல் பால் சேகரிக்கும் லொறியொன்று சென்று கொண்டிருந்த போது பாதையோரத்தில் பையொன்றில் போத்தல்கள் காணப்படுவதை அவதானித்துள்ளனர்.

இப்பையில் காணப்படும் போத்தல்களால் லொறியின் டயர் சேதமடையும் என்ற அச்சத்தில் பையை அப்புறப்புடுத்த முற்பட்ட போது பையினுள் கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பாக உடனடியாக தவுலகல பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

 இக்குண்டுகள் செயலிழக்கச் செய்வதற்காக கம்பளை பிரிவு இராணுவ கட்டளைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தவுலகல பகுதியில் வீதியோரத்தில் பையொன்றில் மீட்கபட்ட எட்டு கைக்குண்டுகள். தவுலகல பகுதியில் வீதியோரத்தில்  பையொன்றில் மீட்கபட்ட எட்டு கைக்குண்டுகள். Reviewed by Madawala News on 10/18/2017 02:49:00 PM Rating: 5