Kidny

Kidny

பாகிஸ்தானுக்கு இலங்கை அணி உதவ வேண்டும். உதவுவார்கள் என நம்புகிறேன்.


பாகிஸ்தானில் லாகூருக்கு வந்து T20  போட்டியில் பங்கேற்குமாறு இலங்கை அணிக்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கப்டன் வக்கார் யூனிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

 இப்போட்டி முடிவடைந்ததும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும். அதன்பின் இரு t-20போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இரண்டாவது சில போட்டிகள்  பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் என பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

எனினும் பாகிஸ்தான் சென்று இந்தப் போட்டியில் பங்கேற்பது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை இறுதி முடிவெடுக்காத நிலையில், அங்குள்ள பாதுகாப்புநிலைமைதொடர்பா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அதன்பின்னரே இப்போட்டியில் பங்குபற்ற லாகூர் செல்வதாஇல்லையா என முடிவெடுக்கும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் வந்து லாகூரில் சி-20 போட்டி பில் பங்கேற்குமாறும் அங்கு பாதுகாப்பு சூழ்நிலை சிப்பா இருப்பதாகவும் தெரிவித்துள்ள வக்கார் யூனில், கடந்த எட்டு வருடங்களாக பாகிஸ்தானில் ஓரிரு சர்வதேச போட்டிகளே நடைபெற்றுள்ளதாகவும் அதனை மேம்படுத்த இலங்கை அணியால் உதவமுடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். i. பாகிஸ்தான்அணி கடந்த எட்டு வருடங்களாக பொருளாதார ரீதியில் கடும் நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகிறது.

மனோரீதியாகவும் வீரர்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இதனை மேம்படுத்த சர்வதேசம் உதவவேண்டும்.

தற்போதைய நிலை பில் லாகூரில் இலங்கையுடனான கடைசி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அணி உதவ வேண்டும். அவர்கள் அங்கு வருவார்கள் என தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கட்டுக்கு  மீண்டும் புத்துயிர் அளிக்க இலங்கை உதவும் என நம்புவதாகவும் தெரிவித்துன்னர்,
பாகிஸ்தானுக்கு இலங்கை அணி உதவ வேண்டும். உதவுவார்கள் என நம்புகிறேன். பாகிஸ்தானுக்கு இலங்கை அணி உதவ வேண்டும். உதவுவார்கள் என நம்புகிறேன். Reviewed by Madawala News on 10/04/2017 03:06:00 PM Rating: 5