Kidny

Kidny

வத்தேகெதர விவகாரம்... விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 பெரும்பான்மை இனத்தினர் விடுதலை.


-ஏ.ஆர்.ஏ.பரீல்-
வத்துகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்தேகெதரயில் பெரும் பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கும், முஸ்லிம்களுக்கும்,
இடையில் கடந்தவாரம் ஏற்பட்ட கைகலப்பினையடுத்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் தெல்தனிய நீதிவான் நீதிமன்ற நீதிவான் பிணையில் விடுதலை செய்தார்.

வத்தேகெதரையில் உள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் உணவருந்தச் சென்ற வேளை ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கும்,
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்க ளுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.  கொதிநீர் பிரயோகமும் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டலும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஹோட்டல் ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்தும் கண்டி வைத் தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பொல்கொல்ல குல்லகெட்டுவ பின்கலை விகாரதிபதி, வத்துகாமம் பொலிஸார் மற்றும் பாதிக் கப்பட்ட தரப்பினர் சிவில் சமூகப் பிரதிநிதிகள், வத்தே கெதர ஜும்ஆபள்ளிவாசல் நிர்வாகிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமா தானமாக பிரச்சினையை தீர்க்க இணங்கண்டமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்களுக்குள்ளான ஹோட்டலுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொள்வதில்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பு தீர்மானித்திருக்கிறது.

வத்தேகெதர விவகாரம்... விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 பெரும்பான்மை இனத்தினர் விடுதலை. வத்தேகெதர விவகாரம்... விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 பெரும்பான்மை இனத்தினர் விடுதலை. Reviewed by Madawala News on 10/31/2017 01:51:00 PM Rating: 5