Kidny

Kidny

வீதியில் நிறுத்தி வைத்திருந்த லொறியை தீவைத்து எரித்த நாசகார கும்பல்.


வெலிமடை திமுத்துகம பகுதியில் வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தி வைத்திருந்த லொறி ஒன்று தீயினால் முற்றாக
எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வெலிமடை திமுத்துகம கிராம பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதிகாலை வேளையில் லொறி எரியும் வெளிச்சத்தினைக் கண்ட வீட்டின் உரிமையாளர், அயல்வர்களின் உதவியுடன் தீயை அணைத்த போதிலும், லொறி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீதியில் நிறுத்தி வைத்திருந்த லொறியை தீவைத்து எரித்த நாசகார கும்பல். வீதியில் நிறுத்தி வைத்திருந்த லொறியை தீவைத்து எரித்த நாசகார கும்பல். Reviewed by Madawala News on 10/21/2017 07:36:00 PM Rating: 5