Kidny

Kidny

பத்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அக்குறணை யகீன் மொடல் ஸ்கூல் . (வீடியோ இணைப்பு)


பfஹத் இக்பால் -

கண்டி அக்குறணை யகீன் மொடல் ஸ்கூலின் பத்தாவது ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா என்பன கடந்த 30 ம் திகதி சனிக்கிழமை கண்டி அந்தோனியார் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றது.


யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் பfஹ்மி பாரூக் அவர்களது தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சயீத் அன்வர் அவர்கள் பிரதம அதிதியாகவும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் மவுலானா வக்காஸ் அலி அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர் .
ஏராளமான உலமாக்கள், துறை சார் நிபுணர்கள் மற்றும் பெற்றோர்கள், நலன்விரும்பிகளின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற இந்நிகழ்ச்சியில் பாடசாலையின் பத்து வருடப் பூர்த்தியை முன்னிட்டு நூருல் யகீன் என்ற சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.


யகீன் மொடல் ஸ்கூல் மற்றும் அதன் பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூல் என்பவற்றின் மாணவ மாணவியருக்கான வெவ்வேறு பரிசுகளும் சான்றிதழ்களும் இந்நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டன.


மாணாக்கரின் நிகழ்ச்சிகள் யாவும் நவீன இலத்திரனியல் முறை மூலமாக காண்பிக்கப்பட்டன. இவை பாடசாலையின் ஈ - லேனிங் பிரிவினால் சிறப்பான முறையில் தயார் படுத்தப்பட்டிருந்தன. மேலும் மஹ்ரம் முறையை அனுசரித்து அனைத்து விடயங்களிலும் பெண்களுக்கான ஏற்பாடுகள் வேறாக செய்யப் பட்டிருந்தன.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் டிஜிட்டல் முறை மூலமான பாடசாலை நிகழ்ச்சி ஒன்றை வாழ்க்கையில் முதன் முறையாக இன்று எமக்கு பார்க்கக் கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் கூறிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
இலங்கையில் ஈ - லேனிங் கற்றற்றல் கற்பித்தல் முறைக்கான ஸ்டூடியா மற்றும் பொறிமுறையை அறிமுகப்படுத்திய முதலாவது பாடசாலை யகீன் மாடல் ஸ்கூல் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பாடங்களைத் தயாரிக்கும் ஸ்டூடியோ நிஸ்வான் மொடல் ஸ்கூலில் அமைந்துள்ளது.

இவ்விழாவில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகளின் வீடியோ இணைப்புக்களை  நீங்கள் கீழே காணலாம்

பத்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அக்குறணை யகீன் மொடல் ஸ்கூல் . (வீடியோ இணைப்பு) பத்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அக்குறணை யகீன் மொடல் ஸ்கூல் . (வீடியோ இணைப்பு) Reviewed by Madawala News on 10/07/2017 02:42:00 PM Rating: 5