Kidny

Kidny

வில்பத்து, முசலி பிரதேச முஸ்லிம்களுக்கு 100 வீடுகளை கட்டித்தருவோம். பொதுபல சேனா அறிவிப்பு.


பெளத்த மக்களின் நல்லெண்னத்தை வெளிப்படுத்தும் வகையில் வில்பத்து, முசலி பிரதேச செயலகப் பகுதியில்
முஸ்லிம்களுக்கு 100 வீடுகளை நிர்மாணித்துக்கொ டுப்பதற்கு பொதுபல சேனா விருப்பம் தெரிவித்துள்ளது.


முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கும் பொதுபல சேனா பிரதிநிதிகளுக்குமி டையில் நேற்று முன்தினம் 2 இரவு நடைபெற்ற 5ஆம் சுற்று பேச்சுவார்த் தையின் போதே இவ்விடயம் தெரி விக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற 4ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது வில்பத்துவின் உண்மை நிலைவரம் குறித்து முஸ்லிம் தரப்பினரால் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.


இவ்விடயங்களை ஏற்றுக்கொண்ட பொதுபல சேனா பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது பெளத்த சமூகத் தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் வில்பத்து பகுதியில் 100 வீடுகளை கட்டித்தருவதாக விருப் பம் தெரிவித்தது.

இதேவேளை, நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரபு மத்ரசாக்கள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள், பள்ளிவா சல்கள் குறித்து பொதுபலசேனா பிரதி நிதிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் பங்கேற்ற மெளலவி பாசில் இது தொடர்பான விளக்கங்களை அளித்துள்ளார்.

தேவையேற்படின் முஸ்லிம்களின் அரபு மத்ரசாக்களையும் சென்று பார்வையிடுமாறும் முஸ்லிம் தரப்பு பொதுபல சேனா பிரதிநிதிகளை கோரியுள்ளது.

இதன்போது முஸ்லிம் பிரதிநிதியொருவர் இருப் பார் எனவும் இணக்கம் காணப்பட் டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுவார்தைகளை அவதானிக்கும்போது முஸ்லிம்கள் தொடர் பில் பொதுபல சேனா கொண்டி ருந்த சந்தேகங்கள் நீங்கியிருப்பதாக முஸ்லிம் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டு கின்றனர்.


எதிர்வரும் காலத்தில் இருதரப் புக்குமிடையில் நடைபெற்ற பேச்சு வார்தைகளை பகிரங்கப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய
வருகிறது. இதேவேளை இருத ரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் அரசியலமைப்பு குறித்த விடயங்களும் கலந்துரை யாடப்பட்டுள்ளன.

ஐக்கிய இலங் கைக்குள் ஒற்றையாட்சி முறையே வேண்டும் என முஸ்லிம் தரப்பு கூறி யமைக்கு பொதுபல சேனா பிரதிநிதி கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்போது ஒற்றையாட்சியே வேண்டும் என்கின்ற முஸ்லிம்களின் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்து மாறும் பொதுபல சேனா பிரதிநிதி கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு முஸ்லிம் தரப்பு முஸ்லிம் களது நிலைப்பாடு ஒற்றையாட்சியே எனத் தெரிவித்து விரைவில் இதுகு றித்து முஸ்லிம் சமூகத்தின் ஏனைய அமைப்புக்களையும் ஒன்றிணைத்து அறிக்கை வெளியிட இருப்பதாக வும் தெரிவித்துள்ளது.


முஸ்லிம் தரப்புக்கும் பொதுபல சேனாவுக்குமிடையில் நடைபெற்ற 5ஆம் சுற்று பேச்சுவார்தையின் போது வழமைபோன்று பொதுபல சேனா அரமைப்பின் தலைவர் கல கொடஅத்தே ஞானசார பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.


எனினும் இங்கு பேசப்படும் விடயங்கள் அவருடன் பகிரப்படுவதாகவும் அவரின் தயார்படுத் தலுடனேயே இப்பேச்சுவார்தை கள் இடம்பெற்று வருவதாகவும் பொதுபல சேனா பிரதிநிதிகள் தெரி வித்திருந்தனர்.


இதேவேளை பொதுபல சேனா வுக்கும் முஸ்லிம் தரப்புக்குமிடையி லான 6ஆவது சுற்றுப்பேச்சுவார்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பொதுபல சேனாவுக்கு ஏதேனும் சந் தேகங்கள் இருப்பின் கடிதம் மூலம் அறிவிக்கும்படியும் முஸ்லிம் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


இப்பேச்சுவார்தையில் முஸ்லிம் தரப்பு சார்பில் உலமா சபை பிரதிநி திகள், முஸ்லிம் கவுன்ஸில் பிரநிதி கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். பொதுபல சேனா சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் திலன்த விதானகே உள்ளிட்ட இதர பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

- ஹெட்டி ரம்சி -
வில்பத்து, முசலி பிரதேச முஸ்லிம்களுக்கு 100 வீடுகளை கட்டித்தருவோம். பொதுபல சேனா அறிவிப்பு. வில்பத்து, முசலி பிரதேச முஸ்லிம்களுக்கு 100 வீடுகளை கட்டித்தருவோம். பொதுபல சேனா அறிவிப்பு. Reviewed by Madawala News on 11/04/2017 12:45:00 PM Rating: 5