Kidny

Kidny

139 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை. பங்களாதேஷ் ஹைகோர்ட் தீர்ப்பு.



74 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 139 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை உறுதி செய்து
வங்காளதேச ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

பங்களாதேஷில் கடந்த 2009–ம் ஆண்டு ராணுவத்தினர் மத்தியில் கலகம் ஏற்பட்டது. அப்போது நடந்த மோதலில் 57 ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்ட 74 பேரை சக ராணுவ வீரர்களே கொலை செய்தனர். இந்த கலகம் தொடர்பாக சுமார் 800 வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த டாக்கா கீழ் நீதிமன்றம் ஒன்று 152 வீரர்களுக்கு மரண தண்டனையும், 158 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. மேலும் 251 பேருக்கு 10 ஆண்டுகள் வரையும் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2013–ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் வங்கதேச ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் 139 வீரர்களுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் 146 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
139 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை. பங்களாதேஷ் ஹைகோர்ட் தீர்ப்பு. 139 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை. பங்களாதேஷ் ஹைகோர்ட் தீர்ப்பு. Reviewed by Madawala News on 11/28/2017 07:33:00 AM Rating: 5