Kidny

Kidny

தேர்தல் பொறிக்குள் மைதிரி !


2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்குபின் பாராளுமன்ற தேர்தல் நடந்தது,அந்த தேர்தல் நடந்ததன் பிற்பாடு
,உரிய நேரத்தில் நடக்கவேண்டிய உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை நடத்தவிடாமல் ஏதோ காரணங்களைச் சொல்லி இழுத்தடிப்பதன் நோக்கம் என்னவென்று பார்த்தோமேயானால், அதற்கு காரணமானவர் ஜனாதிபதி மைத்திரி அவர்கள்தான் என்பது தெளிவாகும்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்தவை எதிர்த்து களம்கண்ட இந்நாள்  ஜனாதிபதி மைத்திரி அவர்கள் வெற்றியடைந்தது .தே.கட்சி மற்றும் சிறுபாண்மை சமூக மக்களின் ஆதரவினாலாகும்

அதேநேரம் ஸ்ரீ.சு.கட்சி ஆதரவாளர்கள் 58லட்சம் பேர் மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாக வரக்கூடாது என்று அவரை எதிர்த்து வாக்களித்தவர்கள் என்பதை நாம் அறிவோம்.

மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாக வெற்றியடைந்ததன் பின் அவரை எதிர்த்து வாக்களித்த மக்களின் கட்சியான ஸ்ரீ.சு.கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.தலைவராக நியமிக்கப்பட்டாலும் அந்த கட்சியின் ஆதரவாளர்களை அவரினால் கவரமுடியவில்லை என்ற விடயமும் யாரும் அறியாததும் அல்ல.
இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தல் வந்தது, அந்த தேர்தலில் தன்னால் ஸ்ரீ..சு.கட்சி ஆதரவாளர்களை நேருக்கு நேர் சந்திக்கமுடியாது என்று தெறிந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரி அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மஹிந்த அவர்களை பல சொல் வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் களம் இறக்கினார்.

அந்த தேர்தலில் சு.கட்சிக்கு ஆதரவாக மைத்திரி அவர்கள் எந்த பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதை நாம் அறிவோம், ஆனால் மஹிந்த அவர்கள் தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். மஹிந்தவின் பிரச்சாரத்தின் காரணமாக மக்கள் மீண்டும் மஹிந்த பக்கம் வருவது தெளிவாகிய போதும்இந்த மக்கள் அலை எங்கே மஹிந்தவை மீண்டும் அரியாசனம் ஏற்றிவிடுமோ என்று பயந்த ரணிலும், மைத்திரியும் கடைசிநேரத்தில் கழுத்தறுப்பு நாடகத்தை அரங்கேற்றினார்கள்

சுதந்திரக்கட்சி வெற்றியடைந்தாலும் மஹிந்த பிரதமராக வரவிடமாட்டேன் என்று கூறியது மட்டுமல்ல சு.கட்சியின் செயலாளரையும் உடனடியாக மாற்றினார் மைத்திரி அவர்கள்.

இதனால் ஏமாற்றம் அடைந்தது மஹிந்த மட்டுமல்ல, மஹிந்தவுக்கு ஆதரவான சு.கட்சி ஆதரவாளர்களும்தான் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்இந்த நிலையில் சு.கட்சியின் ஆதரவாளர்கள் சோர்வடைந்தே காணப்பட்டனர், அதனால் வாக்களிக்கும் வீதம் கணிஷமாக குறைவடைந்து காணப்பட்டது. அந்த தேர்தலில் கிட்டதட்ட 96 பாராளுமன்ற உறுப்பினர்களை மஹிந்தவின் பிரச்சாரத்தால் பெற முடிந்திருந்தது.

அதன் பின் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தன்னுடைய சதுரங்க நாடகத்தை ஆடத்துவங்கினார். வெற்றிபெற்ற சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலபேரை பதவி ஆசையைக்காட்டி தன் அணிக்கு சேர்த்துக் கொண்டார்.அதன் பின் மைத்திரி அணி, மஹிந்த அணியென்று பிரிந்து நின்றார்கள்.

தனது அணியினரை வைத்து .தே..கட்சியுடன் கூட்டரசாங்கத்தை அமைத்து ஆட்சிவண்டியை ஓட்டத்தொடங்கிய மைத்திரி அவர்களுக்கு இன்னும் ஒரு தேர்தலை சந்திக்கும் நிலையில் இல்லாமல் இருந்தார். அதற்காக அதன் பின் நடத்தப்படவேண்டிய உள்ளூராட்சி தேர்தல்களைக் கூட  ஏதோ காரணங்களை சொல்லி காலம் கடத்திவந்தவருக்கு, மாகாணசபை தேர்தல்கள் குறுக்கே வந்து நின்றது, அதனையும் ஏதோ காரணங்களை வைத்து ஒத்திப்போட்ட மைத்திரி அவர்களுக்கு உள்ளூராட்சிமன்ற  தேர்தல்களை மேலும் இழுத்தடிப்பதற்கு முடியாமல் போய்விட்டது.

இருந்தாலும் 93 சபைகளுக்குமான தேர்தலை சந்தித்தே ஆகவேண்டிய நிலைக்கு இன்று மைத்திரி அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்.இதன் காரணமாக மக்கள் சக்தி என்பக்கமே என்று நிரூபித்துவரும் மஹிந்தவை மீண்டும் இணைத்துக் கொண்டு, அவர்மூலம் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றியடையலாம் என்று நினைத்துக்கொண்டு, தற்போது மஹிந்த அணியினரோடு பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் ஏமாற்றத்தைச் சந்தித்த மஹிந்த அவர்கள் இனிமேலும் ஏமாறுவாரா என்று எதிர்பார்க்க முடியாது. அப்படி மைத்திரியுடன் இணைந்து கேட்பதாக இருந்தால் தனக்கு வசதியான நிபந்தனைகளை முன்வைத்துத்தான் மஹிந்த அணியினர்  இணைய பார்ப்பார்கள்

அப்படியான நிபந்தனைகள் மைத்திரிக்கும் ரணிலுக்கும் ஆப்பாக மாறிவிடும் என்று உணரும் மைத்திரி அவர்கள், அதற்கு உடன்படுவாரா என்பது கேள்விக்குறிதான் என்றிருந்தாலும்மைத்திரியின் நிலைமை மிகவும் இக்கட்டான நிலையில்தான் உள்ளது என்பது நடுநிலையாக சிந்திக்கும் எல்லோரும் அறிவார்கள்.

மஹிந்த அணியினரின் மக்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகிவருகின்ற இந்த நிலையில் தேர்தலொன்று நடைபெற்று அதிலே மஹிந்த அணியினர் வெற்றியடைந்து,மைத்திரி அணியினர் தோல்வியடைந்தால், அதன் பிறகு அரசியலிலே பெரிய மாற்றங்களை நாம் எதிர்பார்க்க முடியும்

இப்படியொரு நிலையேற்பட்டால் ஆட்சியை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு மைத்திரி ரணில் அணியினரால்  முடியாமல் போய்விடும், அதன் பிறகு நடக்கப் போகும் தேர்தல்களையும் அவர்களினால் எதிர்கொள்ள முடியாமலும் போகும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

பாராளுமன்ற தேர்தலில் மஹிந்தவை முன்னிறுத்தி, அதன் மூலம் பெற்ற உறுப்பினர்களில் சிலபேரை தன்பக்கம் இழுத்துக்கொண்டு, அதன்  மூலம்  தனது இயலாமையை அன்று மறைத்துக்கொண்ட மைத்திரி அவர்களுக்கு, எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய சவாலாகவே  மாறப்போகின்றது. இதனை எதிர்கொள்ள மைத்திரி அவர்கள்  என்ன செய்யப்போகின்றார் என்பது ஆயிரம் வோட்ஸ் கேள்வியாக தொக்கி நிற்கின்றது.

மஹிந்த அணியினர் இணையாத தேர்தலில், மைத்திரி அவர்கள் எப்படி பிரச்சாரமேடைகளில் தனது கூட்டரசாங்கத்தின் பங்காளியான .தே.கட்சிக்கு எதிராக எப்படி களம் காணப்போகின்றார் என்பதையும், மஹிந்த அணியினரை எப்படி சமாளிக்கப்போகின்றார் என்பதையும், மைத்திரியின் பிரச்சாரச்சார தந்திருங்கள் வெற்றியளிக்குமா  என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நிச்சயமாக பொறிக்குள் மைத்திரி மாட்டிக்கொண்டார் என்பதே நிதர்ஷனமான உண்மையுமாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
தேர்தல் பொறிக்குள் மைதிரி ! தேர்தல் பொறிக்குள் மைதிரி ! Reviewed by Madawala News on 11/30/2017 04:11:00 PM Rating: 5