Kidny

Kidny

பட்ஜெட் 2018 இது வரை அறிவிக்கப்பட்டவை. ( அப்டேட் 1)


2018ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனை இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

மங்கள தனது ஆரம்ப உரையில், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அதன் பின்னர் பட்ஜெட் வாசிப்பு ஆரம்பமானது..

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு 90 வீத வரி விலக்கு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 

இலத்திரனியல் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கும் இறக்குமதி வரிகள் தளர்த்தப்படும் என்பதுடன் மின்சார கார்களுக்கான வரி ஒரு மில்லியன் வரை குறைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

அதேவேளை 2040ம் ஆண்டளவில் எரிபொருள் அல்லாத வாகனங்களை கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பணவீக்கத்தை 6 வீதத்துக்கு கீழ் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்

2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் குறைவடையும்

எதிர்வரும் காலங்களில் வரையறைகளுடன் வாகன இறக்குமதி : எயார் பாக் இல்லாத வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது

சொகுசு வாகனங்களுக்கு 25 வீதம் வரி அதிகரிப்பு

பிளாஸ்டிக் உற்பத்திக்கு 10 வீத வரி அதிகரிப்பு

மீனவ, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் கல்கிஸை முதல் இரத்மலானை வரை கடற்கரையோரம் புனரமைப்பு

2500 வலுக் கொண்ட வாகனங்களுக்கு சிறப்பு வரி

டீசல் முச்சக்கர வண்டிகளுக்கு 50 ஆயிரம் ரூபா வரி அதிகரிப்பு

மனித வள அபிவிருத்திக்கு 75 மில்லியன் 3 வருடங்களில் எதிர்பார்ப்பு

  • முல்லைத்தீவு, நந்திக்கடல், நாயாறு உள்ளிட்ட 10 களப்புகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

  • நாட்டிலுள்ள களப்புகளை பாதுகாக்க மற்றும் புத்தாக்கம் செய்வதற்கு 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


பட்ஜெட் 2018 இது வரை அறிவிக்கப்பட்டவை. ( அப்டேட் 1) பட்ஜெட் 2018 இது வரை அறிவிக்கப்பட்டவை. ( அப்டேட் 1) Reviewed by Madawala News on 11/09/2017 03:55:00 PM Rating: 5