Ad Space Available here

பட்ஜெட் 2018 இது வரை அறிவிக்கப்பட்டவை. ( இறுதி அப்டேட் )


பட்ஜெட் 2018 வாசிப்பு முடிவு வரை  வரையில்... ( ஆரம்ப வாசிப்புகளை முந்தைய செய்திகளில் பார்க்கலாம்)


2017-11-09 17:46:43
மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பஸ் தொடர்பில் காபன் வரியை அறிமுகப்படுத்த யோசனை

 2017-11-09 17:45:05
வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற வீடமைப்பு நடவடிக்கைகளுக்காக 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க யோசனை

 2017-11-09 17:39:33
வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காக வீடமைக்க 2.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 17:39:14
2018 ஜனவரி முதலாம் திகதி முதல் மோட்டார் வாகனங்களுக்கான கடன் வசதி இல்லை

 2017-11-09 17:38:08
திரவமற்ற மதுப்பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் விசேட வரி அமுல்

 2017-11-09 17:37:53
குறுஞ்செய்தி விளம்பரங்களுக்கு வரி

 2017-11-09 17:37:32
சட்டவிரோத சிகரெட்டுக்களை தடுப்பதற்காக சிகரெட் இறக்குமதியின் போது அனுமதி பத்திரம்

 2017-11-09 17:36:28
சட்டவிரோத சிகரெட்டுக்களை தடுப்பதற்காக சிகரெட் இறக்குமதியின் போது அனுமதி பத்திரம்

 2017-11-09 17:35:50
முகாமைத்துவ அமைப்பொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

 2017-11-09 17:34:49
சுங்க கட்டளைச்சட்டத்திற்காக புதிய கட்டமைப்பு

 2017-11-09 17:34:28
மதுவரித் திணைக்களத்திற்கு புதிய முகாமைத்துவம் அறிமுகம்

 2017-11-09 17:32:30
கடனை மீள செலுத்துவதற்கு 3 வருடத்திற்கு விசேட வரி

 2017-11-09 17:32:03
சட்டவிரோத மதுபான உற்பத்திகளுக்கு கடும் கலால் சட்டம்

 2017-11-09 17:31:14
எதிர்வரும் காலங்களில் சுருட்டு புகையிலை விற்பனை செய்வதற்கான அனுமதி பெறப்படல் வேண்டும்

 2017-11-09 17:30:32
வங்கி நடவடிக்கைகளுக்கு 1000 ரூபாவுக்கு 20 வீதம் வரி

 2017-11-09 17:25:44
கருவாட்டின் விலை 750 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 2017-11-09 17:24:32
நேற்றைய தினம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கபட்டன. குறிப்பாக பருப்பு, கருவாடு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் எண்ணெய் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன

 2017-11-09 17:24:13
வடக்கில் விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

 2017-11-09 17:22:33
காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலக பணிகளுக்கு 1.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 17:22:01
2016 இற்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு “அக்ரஹார காப்புறுதித் திட்டம்” வழங்குவதற்கான நடவடிக்கை

 2017-11-09 17:21:29
யாழ்ப்பாணத்திற்கு நவீன பொருளாதார மையம்

 2017-11-09 17:21:21
அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் வாகன சலுகையை தொடர்ந்தும் அமுல்படுத்த நடவடிக்கை

 2017-11-09 17:20:03
வடக்கில் விசேட தேவையுடைய பெண்களுக்கு வீட்டு திட்டம்

 2017-11-09 17:19:39
அரச வங்கிகளின் மூலதனச் சந்தையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை

 2017-11-09 17:19:26
தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரியை ஒரு வருடத்திற்கு நீக்க யோசனை

 2017-11-09 17:18:47
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கிற்கு 50 ஆயிரம் வீடுகள்

 2017-11-09 17:18:33
ஓய்வு பெற்றவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய உணவு காப்புறுதித் திட்டம்

 2017-11-09 17:17:26
அரச பணியாளர்களுக்கான குழந்தை பராமரிப்பு மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை

 2017-11-09 17:16:31
புராதன மத வழிபாட்டுத் தலங்களை புனர்நிர்மாணம் செய்ய 2500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 17:14:40
அரச சேவையாளர்களுக்கு பொதுக்கொடுப்பனவு முறையொன்றை உருவாக்குதல்

 2017-11-09 17:14:31
கலைஞர்களுக்கான விசேட திட்டம்

 2017-11-09 17:14:23
முன்னேஸ்வரம், அநுராதபுரம் உள்ளிட்ட மத வழிபாட்டு இடங்களில் யாத்திரிகர்களுக்கான ஓய்வறைகள் நிர்மாணிக்கப்படும்

 2017-11-09 17:13:09
தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை

 2017-11-09 17:12:57
நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணைசெய்ய விசேட தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நீதிமன்றம் அமைக்க 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 17:11:37
இரத்தினபுரி மற்றும் வெலிமடை நீதிமன்றங்களை பிறிதொரு ,இடத்தில் அமைக்க நடவடிக்கை

 2017-11-09 17:10:22
ஐக்கிய நாடுகளின் அமைதிப் படைக்காக இந்நாட்டு இராணுவ சிப்பாய்களின் பாடநெறிக்காக 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 17:09:49
எதிர்காலங்களில் இளவயது குற்றவாளிகள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றுக்கு வேறாக அழைத்துச் செல்லப்படுவர்

 2017-11-09 17:08:06
மீள் குடியேற்றத்திற்கு விசேட நிதி ஒதுக்கீடு

 2017-11-09 17:06:46
நகர்ப்புற மறுவாழ்வு திட்டத்திற்காக 24,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 17:06:24
பஸ் பயணத்திற்காக ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்த நடவடிக்கை

 2017-11-09 17:06:06
சைபர் கிரைம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படும்

 2017-11-09 17:05:54
பொலிஸ் சேவையை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு

 2017-11-09 17:04:09
குறைந்த வசதிகளைக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நகரங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

 2017-11-09 17:03:42
கூட்டு வௌ்ளப்பெருக்கிற்கு கட்டுப்பாட்டு முறை

 2017-11-09 17:03:15
மத்திய அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கீடு

 2017-11-09 17:02:48
சர்வதேச குற்றங்கள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் 500 மில்லியன் ரூபா செலவில் விஷேட பொலிஸ் பல்கலைக்கழகம்

 2017-11-09 17:00:44
லயன் வீடுகளில் வாழுவோருக்கு 25000 ஆயிரம் வீடுகள் ; 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

 2017-11-09 16:59:05
பாலியல் நோய்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

 2017-11-09 16:58:51
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் மதுபானங்களுக்கு NBT வரி விதிக்க தீர்மானம்

 2017-11-09 16:57:36
கொழும்புத் துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை

 2017-11-09 16:56:11
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 2 இலட்சம் ரூபா நிதி உதவி

 2017-11-09 16:53:23
விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தும் பாதணிகளுக்கான வரி இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

 2017-11-09 16:51:53
நாட்டிலுள்ள 100 கிராமப்புற விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

 2017-11-09 16:51:28
குளிர் பானங்களில் சேர்க்கப்படும் சீனியின் அளவுக்கு இன்று நள்ளிரவு முதல் விஷேட வரி ஒரு கிராமிற்கு 50 சதம்

 2017-11-09 16:51:02
சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கினை சர்வதேச அளவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

 2017-11-09 16:50:10
காலி, கராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலையை மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

 2017-11-09 16:49:21
தொற்று நோய்களை தடுப்பதற்கான விசேட நடவடிக்கை

 2017-11-09 16:49:04
நீரிழிவு வைத்தியசாலையை அமைக்க நடவடிக்கை

 2017-11-09 16:47:25
நாட்டில் பல சுகாதாரத் திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை

 2017-11-09 16:46:52
மாத்தளை ஹொக்கி விளையாட்டரங்கை மேம்படுத்த 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 16:45:40
விளையாட்டு பயிற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டம்

 2017-11-09 16:45:25
பல்கலைக்கழக மாணவர்களுக்கான காப்புறுதி திட்டம்

 2017-11-09 16:45:17
சர்வதேச தரத்திற்கு விளையாட்டுத் துறை மேம்படுத்தப்படும்

 2017-11-09 16:45:06
கணிதம் போன்ற பாடங்களுடன் அழகியல் பாடங்களை கற்க உயர் தர மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்

 2017-11-09 16:43:51
நாட்டிலுள்ள தேசிய வைத்தியசாலைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை

 2017-11-09 16:43:12
யாழ். பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா வளாகத்திற்கு புதிய நூலக வசதி

 2017-11-09 16:42:00
உயர் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை

 2017-11-09 16:40:54
பல்கலைக்கழகங்களில் வைத்திய கல்வியை மேம்படுத்த 1250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 16:40:21
விசேட தேவையுடைய நபர்களால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரி நிவாரணம்

 2017-11-09 16:38:55
மாணவர்களின் நலன்களை கருத்திற்கொண்டு 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 16:38:39
ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சி

 2017-11-09 16:38:31
பாடசாலைகளில் ஸ்மார்ட் கல்வி அறைகள் ஸ்தாபிக்க 750 மில்லியன் ஒதுக்கீடு

 2017-11-09 16:38:20
டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் தொழில் நுட்பங்களை மேம்படுத்த நடவடிக்கை

 2017-11-09 16:36:47
நாட்டில் கணக்காளர்களை உருவாக்க விசேட திட்டம்

 2017-11-09 16:36:26
இளைஞர்களுக்கு விசேட தொழிற்பயிற்சி பாடநெறி

 2017-11-09 16:36:15
நாட்டில் மேலும் 5 தொழில்பயிற்சி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

 2017-11-09 16:36:07
தொழில் மற்றும் திறன் பயிற்சி சாலைகளை அமைக்க அதிக கவனம் செலுத்தப்படும்

 2017-11-09 16:35:54
இளைஞர் கழகங்களுக்கு மேலதிகமாக 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

 2017-11-09 16:35:42
மாணவர்களுக்கு “டெப்” வழக்கும் நடைமுறை மேலும் மேம்படுத்தப்படும்
பட்ஜெட் 2018 இது வரை அறிவிக்கப்பட்டவை. ( இறுதி அப்டேட் ) பட்ஜெட் 2018 இது வரை அறிவிக்கப்பட்டவை. ( இறுதி  அப்டேட் ) Reviewed by Madawala News on 11/09/2017 06:10:00 PM Rating: 5