Kidny

Kidny

மாத்தளை இரத்தோட்டை வீதி மோட்டார் சைக்கிள் விபத்து. 21 வயது இளைஞர் உயிரிழப்பு.


- ஜே.எம்.ஹபீஸ்-

மாத்தளை இரத்தோட்டை வீதியில் கைகாவலை பிரதேசத்தில்  (04.11.2017 மாலை)  இடம் பெற்ற
வாகன விபத்து ஒன்றில் 21 வயதுடைய  இரத்தோட்டைப் பிரதேச இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

இவ் விடத்தில் மோட்டார் சைக்கில் ஒன்று பாதையில் தடம் புரண்டுள்ளதுடன் அதன் பின்னால்  பயனித்த மோட்டார் கார் ஒன்று பாதையில்​ விழுந்திருந்த மோட்டார் சைக்கில்  சாரதி மீது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து கார் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகப் பொலீசார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள மோட்டார் சைக்கிலை செலுத்தியவர் மாத்தளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு  அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்  இரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த வெல்லசாமி வினோத் என்ற 21 வயதுடைய  இளைஞர் ஆவார்.

இவ் விபத்துடன்தொடர்படையவர் என சநதேகிக்கும் நபரான  தப்பிச் சென்றுள்ள மோட்டார் காரின்  சாரதியை கைது செய்வதற்கு  இரத்தோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.
மாத்தளை இரத்தோட்டை வீதி மோட்டார் சைக்கிள் விபத்து. 21 வயது இளைஞர் உயிரிழப்பு. மாத்தளை இரத்தோட்டை வீதி மோட்டார் சைக்கிள் விபத்து. 21 வயது இளைஞர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 11/05/2017 03:07:00 PM Rating: 5