Kidny

Kidny

அமெரிக்கா 21 மில்லியன் டொலர் நிதி உதவி


இலங்கையில் பாலுடன் தொடர்புபட்ட உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 21 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


தோமஸ் செனன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்தவிடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.


இலங்கை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தோமஸ் செனன் மேலும் குறிப்பிட்டார்.

வர்த்தகம், முதலீடு, வெளிநாட்டு உதவிகள் உட்பட சகல தரப்புக்களுடனுமான நேரடி தொடர்புகளை மேம்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையுடன் வலுவான பொருளாதார வர்த்தக தொடர்புகளை பேண அமெரிக்கா தயார்

 

என்றும் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனோன் தெரிவித்துள்ளார். 

 

இலங்கை கடற்படையினருக்கு கரையோர பாதுகாப்பு படகொன்றை அன்பளிப்பாக வழங்கவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இலங்கையர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அமைதிகாக்கும் படையினரின் தன்னார்வ தொண்டர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படவிருக்கிறார்கள். 

 

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் பிரதம கருத்து தெரிவிக்கையில் வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் பிராந்தியத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவது இலக்காகும் என்று தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் ஆசிய அமைப்பின் நாடுகளுக்கும், இந்தியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கும் கடல் மூலமான நேரடி வர்த்தக தொடர்புகள் கிடைக்கும். பிராந்தியத்தின் அபிவிருத்திக்கும் இது ஒத்துழைப்பு வழங்கும் என பிரசாத் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.


அமெரிக்கா 21 மில்லியன் டொலர் நிதி உதவி அமெரிக்கா 21 மில்லியன் டொலர் நிதி உதவி Reviewed by Madawala News on 11/08/2017 02:32:00 AM Rating: 5