Kidny

Kidny

எல்லை நிர்ணய வர்த்தமானி: மனுவை விசாரிப்பதா இல்லையா? 22 ம் திகதி முடிவு





உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவை, எதிர்வரும் 22ம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

கொழும்பு, கண்டி, சாலிஎல, மாத்தறை எம்பிலிபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அறுவர், நேற்று இந்த மனுவைத் தாக்கல் செய்தனர். 

இதில், பிரதிவாதிகளாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் குறித்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். 
எல்லை நிர்ணய வர்த்தமானி: மனுவை விசாரிப்பதா இல்லையா? 22 ம் திகதி முடிவு  எல்லை நிர்ணய வர்த்தமானி: மனுவை விசாரிப்பதா இல்லையா? 22 ம் திகதி முடிவு Reviewed by Madawala News on 11/16/2017 12:39:00 PM Rating: 5