Kidny

Kidny

மோடி - ரனில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை ..


இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(23) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த சந்திப்பு புதுடில்லியில் இன்று இடம்பெறுகிறது. இதன் போது இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை யில் முக்கிய கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கி செய்திகளை பிரசுரித்துள்ளன.


இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்படும். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளின் உயர்மட்ட அரச அதிகாரிகள், அமைச்சர்கள் மீனவர் சங்கத்தினர் மட்டத்தில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அது தொடர்பில் நிரந்தரமான தீர்வு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.


மீனவர்கள் மட்ட பேச்சுவார்த்தையின் போது இலங்கை கடற்பரப்பில் மாதத்தில் சில நாட்கள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு காலஅவகாசம் கோரியிருந்தனர். எனினும் அதனை இலங்கை மீனவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறிய பிரதேசம் தொடர்கதையாகவே உள்ளது. நேற்று முன்தினமும் எட்டு இந்திய மீனவர்களை கடற்படையினர் வடக்கில் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மோடி - ரனில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை ..  மோடி - ரனில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை .. Reviewed by Madawala News on 11/23/2017 10:47:00 AM Rating: 5