Kidny

Kidny

உங்கள் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்பது முசீபத்தானது ; நுஸ்ரான் பின்னூரி



கடந்த 3ம் திகதி வெள்ளிகிழமை பண்டாரவள ஜும்மா பள்ளியில் குத்பா உரை நிகழ்த்திய நுஸ்ரான் பின்னூரி அவர்கள் மேற்படி சர்ச்சைக்குள்ளான கருத்த்குக்களை பகிரங்கமாக தெரிவித்ததால் மக்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. குறித்த ஜும்மா உரை ஓடியோவில் பதியப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.


கடந்த காலங்களில் ஊவா மாகாண முஸ்லிம் கல்வி பெரும் பின்னடைவை கொண்டிருந்த வேளை பல சமூகநல தொண்டர் அமைப்புகள் பெரும் பாடுபட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் ஊவா முஸ்லிம் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வரும் இவ்வேளையில் இவரின் இந்த கருத்துக்களுக்கு எதிராக கல்வி சமூகத்தின்  கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

ஊவா மாகாணத்தின் கல்விப் பின்னடைவை கருத்தில் கொண்டு ஜம்மியத்துல் உலமா கல்விப் பிரிவின் பொறுப்பளாராக செயற்படும் யூசுப் முப்தியவர்களின் தலைமையில் இயங்கும் சம் சம் நிறுவனம் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்கு ஊவா முஸ்லிம் பாடசாலைகளை மைய்யப் படுத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதே வேளை நாடளாவிய ரீதியில் முஸ்லிம் கல்வி கட்டியெழுப்ப படவேண்டும் என்ற நோக்கை கொள்கையளவில் ஏற்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அண்மைகாலமாக செயற்பட்டு வருகின்றது.  


ஆனால் அதே ஜம்மியத்துல் உலமா வின் பொறுப்பாளர்களுள் ஒருவரான இந்த பின்னூரி முஸ்லிம்களின் கல்வி விடயத்தில் இவ்வாறு தலைகீழான கருத்துக்களை எந்த வித அடிப்படைகளுமின்றி ஜும்மாவில் தெரிவித்திருப்பது ஜம்மியத்துல் உலமா தலைமையை நோக்கி விரல் நீட்ட வைத்துள்ளது


காரணம் ஒரே இயக்கம் நேர்மறையான இருவேறு கருத்துக்களை  கூற முடியாது. அப்படி கூறும் ஒரு இயக்கம் அறிவுள்ளவர்களின் (உலமாக்களின் ) ஒரு சபையாக இருக்கவும் முடியாது.

 

இந்த நுஸ்ரான் பின்நூரி  கடந்த சில மாதங்களுக்கு முன் ஒபரேஷன் செய்வது ' பச்ச ஹராம்' என்று கூறி பாரியதொரு சர்ச்சயை ஏற்படுத்தினார். தற்போது ' பிள்ளைகளை பாடசாலைக ளுக்கு அனுப்பாதீர்கள்இ உங்கள் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்பது முசீபத்தானது பாடசாலை கல்வித் திட்டம் யூதர்களின் சதியாக உள்ளது


ஆகவே பாடசாலைகளுக்கு உதவி செய்யாதீர்கள். நீங்கள் பாடசாலைகளுக்கு உதவுவதும் யூதர்களுக்கு உதவுவதும் ஒன்றுதான்.தகடு தாயத்துக்களில் மருத்துவம் உள்ளது ஆகவே அவற்றை உங்கள் பிள்ளைகளின் கழுத்துக்களில் தொங்க விடுங்கள் என்று கூறி மீண்டும் முஸ்லிம் சமூகத்தை மௌட்டீகத்தின் பால் அழைப்பு விடுக்கின்றார்.


இவரின் கருத்துக்களை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் நாடளாவிய ரீதியில் மிகப் பெரிய சர்ச்சை கிளப்பப் படும். தாலிபான்களின் செயல்பாடுகள் அவர்களின் சிந்தனைகள் இலங்கையிலும் பரப்ப படுவதற்கு இவரின் கருத்துக்களை மிகப் பெரிய ஆதாரமாக சுட்டிக் காட்டுவார்கள். ஆகவே இவருடைய கருத்துக்கள் சம்பந்தமாக ஜம்மியத்துல் உலமா கூடிய சீக்கிரம் ஒரு முடிவெடுத்தாக வேண்டும்.    


பின்னூரியின் கருத்து சமூகத்தை சீரழிக்கக் கூடியது.!  

                                      


உங்கள் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்பது முசீபத்தானது ; நுஸ்ரான் பின்னூரி உங்கள் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்பது முசீபத்தானது  ; நுஸ்ரான் பின்னூரி Reviewed by Madawala News on 11/09/2017 09:44:00 PM Rating: 5