Kidny

Kidny

கிந்தோட்டையில் பதற்றம்! பொலிஸ் விஷேட அதிரடிப்படை களத்தில்



நிலமையை கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை குவிப்பு!

காலி, கிந்தோட்டை பகுதியில் சற்றுமுன் இரு சமூகங்களுக்கிடையே  ஏற்பட்ட பதற்றத்தை  தொடர்ந்து விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

விபரம்:

3 நாட்களுக்கு முன் பெரும்பான்மை நபர் ஒருவரின்  மோட்டர் சைக்கிளில் முஸ்லிம் சிறுமி ஒருவர் மோதுண்டதால் அந்நபர் போலிசாரால் கைது செய்யபட்டு பின்னர் இன்று விடுதலை செய்யபட்டுள்ளார். 

அதேவேளை இன்று விதானகொட பகுதிக்கு விளையாட சென்று திரும்பிய முஸ்லிம் இளைஞர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்து கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் அப்பகுதியில் சிறு பதற்றநிலை உருவாகி வருகிறது!
கிந்தோட்டையில் பதற்றம்! பொலிஸ் விஷேட அதிரடிப்படை களத்தில்  கிந்தோட்டையில்  பதற்றம்! பொலிஸ் விஷேட அதிரடிப்படை களத்தில் Reviewed by Madawala News on 11/16/2017 11:48:00 PM Rating: 5