Kidny

Kidny

வாடகை வண்டி சாரதி முகம்மத் துவான் யக்கீனை தாக்கி கொலை செய்த மூவருக்கு மரணதண்டனை தீர்ப்பு .



வாடகைக்கு அமர்த்திச் சென்ற பாரவூர்தி சாரதியான மொஹமட் மிஹால் துவான் யக்கீன் என்பவரை வவுனியா, செட்டிகுளம்
பகுதியில் வைத்து கொலை செய்த குற்றத்திற்காக மூன்று பேருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புத்தளம் பகுதியிலிருந்து மன்னார் நோக்கி பாரவூர்தி ஒன்றை மூவர் வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், கப்பாச்சி பகுதியில்பார வூர்தி பயணித்துக்
கொண்டிருந்த போது சாரதியை தாக்கி கொலை செய்து விட்டு அதில் பயணித்த மூவரும்தப்பிச்சென்றனர்.

 இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட செட் டிகுளம் பொலிசார் பாரவூர்தியை வாடகைக்கு அமர்த்திச் சென்ற செட் டிகுளம் பகுதியைச் சேர்ந்த
வீரய்யா ரவீந்திர ஜோதி,
நேசராசா (ராஜி),
குமார் ஆகிய மூவர் தொடர்பில் விசா ரணைகளை மேற்கொண்டதுடன் முதலாம் சந்தேக நபரான வீரய்யா ரவீந்திர ஜோதி என்பரை கைது செய்தனர்.

ஏனைய இரண்டாம் சந்தேக நபரான நேசராசா, மூன்றாம் சந்தேக நபரான குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.

இவ் வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த
நிலையில், குற்றச்சாட்டு தொடர்பில் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராகவும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் (O2) வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் குற்றப் பகிர் வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


இதன்போது இந்த வழக்கின் 2 ஆம், 3 ஆம் சந்தேக நபர்கள் தலை மறைவாகியிருந்ததால் அவர்கள் இல்லாமலே வவுனியா மேல் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் வழக்கு மீதான விளக்கங்கள், சாட்சிப் பதிவுகள் நிறைவடைந்து நேற்று (01) இவ்வழக்கு தீர்ப்புக்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் அறிவிக்கப்பட்டி ருந்தது.
வாடகை வண்டி சாரதி முகம்மத் துவான் யக்கீனை தாக்கி கொலை செய்த மூவருக்கு மரணதண்டனை தீர்ப்பு . வாடகை வண்டி சாரதி முகம்மத் துவான் யக்கீனை  தாக்கி கொலை செய்த மூவருக்கு மரணதண்டனை தீர்ப்பு . Reviewed by Madawala News on 11/02/2017 08:52:00 AM Rating: 5