Kidny

Kidny

ஈரான் நிலநடுக்கம் ! பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டியது ..


இரான் - ஈராக்கிடையே அமைந்துள்ள வடக்கு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 400 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7000 பேருக்கும் மேற்பட்டவர்கள் வரையில் காயமடைந்துள்ளனர்.


இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் செய்தி வயிட்டுள்ளது.


ஈராக்கில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளமையினால் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளை முன்னெடுக்கமுடியாத நிலை காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் உள்ள ஹலாபஜாவின் தென்மேற்கிலிருந்து 19 மைல்கள் தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


33.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், துருக்கி, இஸ்ரேல் மற்றும் குவைத்திலும் குறைந்தளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டது.

ஈரான் நிலநடுக்கம் ! பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டியது ..  ஈரான் நிலநடுக்கம் ! பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டியது .. Reviewed by Madawala News on 11/13/2017 11:29:00 PM Rating: 5