Kidny

Kidny

நீதிபதிகள் எம்.எஸ்.எம்.சம்சுதீன், ஜ.என்.றிஸ்வான், ஏ.எம்.எம்.றியால் உற்பட 41 நீதவான் நீதிபதிகளுக்கு இடமாற்றம்.


-பாறுக் ஷிஹான்-

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் 41 நீதவான் நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவ் இடமாற்றம் பெற்ற வடக்கு-கிழக்கு நீதிபதிகளின் பெயர் விபரம் வருமாறு.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய ஜெ.கஜநிதிபாலன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும், நீதவானாகவும் இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

சவகச்சேரி மாவட்ட நீதிபதியாக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றிய திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வவுனியாக மாவட்ட நீதிபதியாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.


வவுனியா மாவட்ட நீதிபதியாக கடந்த இரண்டு வருடங்கள் கடமையாற்றிய எஸ்.லெனின்குமார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் மாற்றம்பெற்றுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய எம்.எஸ்.எம்.சம்சுதீன் மூதூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம்பெற்றுள்ளார்.

மூதூர் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி ஜ.என்.றிஸ்வான் மட்டக்களப்பு நீதிமன்ற மேலதிக நீதிவானாக மாற்றம் பெற்றுள்ளார்.


இந் நிலையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவானாக கடமையாற்றி மாணிக்கவாசகர் கணேசராஜா மன்னார் மாவட்ட நீதிபதியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நிஜமிக்கப்பட்டுள்ளார்.


முன்னார் மாவட்ட நீதிபதியாக கடந்த மூன்று வருடங்கள் கடமையாற்றி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நிஜமிக்கப்பட்டுள்ளார்.


இந் நிலையில் கல்முனை மாவட்ட நீதிபதி வீ.இராமக்கமலன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக மாற்றம் பெறுகின்றார். இவ் இடமாற்றங்கள் அணைத்தும் 2018-01-01ம் திகதியில் இருந்து அழுலுக்கு வரும் வகையில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜீ.எம்.டபள்யூ ஜெயதிலகவினால் வழங்கப்பட்டுள்ளது.


இதே வேளை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன், மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரீ.கருணாகரன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் நளினி கந்தசாமி, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் ஆகியோர் தொடர்ந்தும் அதே நீதிமன்றங்களில் கடமையாற்றுவர்.
நீதிபதிகள் எம்.எஸ்.எம்.சம்சுதீன், ஜ.என்.றிஸ்வான், ஏ.எம்.எம்.றியால் உற்பட 41 நீதவான் நீதிபதிகளுக்கு இடமாற்றம். நீதிபதிகள் எம்.எஸ்.எம்.சம்சுதீன், ஜ.என்.றிஸ்வான், ஏ.எம்.எம்.றியால் உற்பட  41 நீதவான் நீதிபதிகளுக்கு இடமாற்றம். Reviewed by Madawala News on 11/08/2017 01:58:00 PM Rating: 5