Kidny

Kidny

சவால்களுக்கு முகம்கொடுக்க பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்..





ரோஹினா மஹரூப் இனால் ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா சிராஜியா அரபுக்கல்லூரிகளுக்கு 450 குர்ஆன் பிரதிகள் கையளிப்பு.


திருகோணமலை மாவட்ட முன்னாள் பா.உறுப்பினரும் .தே.கட்சி முக்கியஸ்தரும் முன்னாள்  இராஜாங்க அமைச்சருமான அஷ்ஷஹீத் M.E.H.மஹ்ரூப் அவர்களின் புதல்வியும் சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பின் தலைவியுமான ரோஹினா மஹரூப் அவர்கள் ஓட்டமாவடியிலுள்ள பாத்திமா ஸஹ்ரா மற்றும் சிறாஜியா அரபுக்கல்லூரிகளுக்கு 450 அல் குர்ஆன் பிரதிகளை 03/11/2017 வெள்ளிக்கிழமை  உத்தியோபூர்வமாக கையளித்தார்.

குறித்த கல்லூரி நிர்வாகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக அக்கல்லூரியின் முக்கிய பிரிவாகக் கருதப்படுகின்ற தொழில்நுட்ப பிரிவிற்கு ஒரு தொகை கணணிகளை மிக விரைவில் பெற்றுத் தருவதாகவும் அவர் வாக்குறுதி வழங்கினார்.

சமூக சேவையாளராகவும் பெண்களுடைய உரிமைகள், விதவைகளுக்கான வாழ்வாதாரங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான குரல்,அவர்களுடைய சுயதொழில் முயற்சிகள் என பலதரப்பட்ட சேவைகளை நாடுதழுவிய ரீதியில் செய்து வரும் ரோஹினா மஹரூபினுடைய குறித்த ஓட்டமாவடி அரபுக் கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்,

 "பெண்கள் மார்க்க கல்வியில் மாத்திரமன்றி ஏனைய சகல துறைகளிலும் சிறந்து விளங்குவது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல.எமது சமூகப் பெண்கள் பலதரப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் தம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்என குறிப்பிட்டார்.

-ஊடகப்பிரிவு-
சவால்களுக்கு முகம்கொடுக்க பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்..  சவால்களுக்கு முகம்கொடுக்க பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.. Reviewed by Madawala News on 11/04/2017 08:07:00 PM Rating: 5