Kidny

Kidny

துபாயில் இடம்பெற்ற சுமார் 50 மில்லியன் கொள்ளை. 6 இலங்கையர்கள் குற்றவாளிகள்.


ஏ.ஆர்.ஏ.பரில்-

துபாயில் இடம்பெற்ற 50 மில்லியன்  ரூபா கொள்ளை யிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட 6 இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப் பட்டுள்ள 6 இலங்கையர்களும் பாதுகாப்பு சேவையில் ஈடு பட்டிருந்தவர்கள் ஆவார்கள்.

வேன் ஒன்றில் பணம் கொண்டு செல்லப் பட்டுக் கொண்டிருந்த போது அவர்கள் கொள்ளையடித் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறுவருக்கும் தலா 3 வருடங்கள் வீதம் சிறைத்தண்டனை அந்நாட்டு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.

சிறை தண்டனையை அவர்கள் அனுபவித்ததும் அறுவரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

துபாயில் இடம்பெற்ற சுமார் 50 மில்லியன் கொள்ளை. 6 இலங்கையர்கள் குற்றவாளிகள். துபாயில் இடம்பெற்ற  சுமார் 50 மில்லியன் கொள்ளை. 6 இலங்கையர்கள் குற்றவாளிகள். Reviewed by Madawala News on 11/07/2017 10:36:00 AM Rating: 5