Kidny

Kidny

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர கூட்டு எதிர்க்கட்சி விதித்த 7 நிபந்தனைகள் இது தான்.



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து
போட்டியிடவேண்டுமாயின், தங்களுடைய ஏழு நிபந்தனைகளையும் நிறைவேற்றவேண்டுமென, ஒன்றிணைந்த எதிரணி நிபந்தனை விதித்துள்ளது.   
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் கூட்டாட்சியிலிருந்து விலகவேண்டும் என்பது ஒன்றிணைந்த எதிரணியின் பிரதான கோரிக்கையாகும்.   
ஒன்றிணைந்த எதிரணியின் ஆதரவைக் கோரி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அனுப்பிவைத்துள்ள கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த உறப்பினர்கள் 42 பேர் கையொப்பமிட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்குக் கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளனர்.  

இந்தக் கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கையொப்பமிட்டுள்ளார்.   

1. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முன்கொண்டுசெல்லும் கூட்டாட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகவேண்டும்.   


2. எவ்விதமான கட்டுப்பாடுகளுமின்றி, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.  


3. தேசிய சொத்துகளை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது அல்லது பரிமாற்றம் செய்யும் நடவடிக்கைகளிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விலகவேண்டும். அதற்கெதிராகக் குரல் கொடுக்கவேண்டும்.   


4. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மதிப்புகளுக்கு அமைவாக, அதி வணக்கத்துக்குரிய தேரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்.  


5. நாட்டைத் துண்டாடும் வகையில், அரசாங்கம் வியூகம் வகுக்கும் அரசமைப்பு செயற்பாடுகளிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகவேண்டும்.   


6. தற்போதை சாட்சிகளின் அடிப்படையில், பிணை மு றி விவகாரத்தின் ஊடாக வங்கிகளில் கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக, எவ்விதமான தராதரங்களுமின்றி, கடுமையான சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.   


7. சட்டத்தின் ஆட்சியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு, ஒவ்வொருநாளும் பலப்படுத்திக் கொண்டிருக்கின்ற பாதாள உலகக்கோஷ்டியினரின் மனிதப்படுகொலை சங்கிலியை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.   
ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் பலர், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையால்,இந்தக் கடிதத்தில் கையொப்பமிடவில்லை என்றும், எனினும், கடிதத்தின் உள்ளக்கத்துக்கு அவர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர கூட்டு எதிர்க்கட்சி விதித்த 7 நிபந்தனைகள் இது தான். எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர கூட்டு எதிர்க்கட்சி விதித்த 7 நிபந்தனைகள் இது தான். Reviewed by Madawala News on 11/03/2017 12:34:00 PM Rating: 5