Kidny

Kidny

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7144 வீடுகளுக்கு, இரண்டாவது கட்டத்தில் வழங்கப்பட்ட நட்டஈடு.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 7144 வீடுகளுக்கு இரண்டாவது
கட்டத்தில் வழங்கப்பட்ட நட்டஈடு.


2016ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் 36 கிராமசேவகர் பிரிவுகளில் பாரிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக நட்டஈட்டு நிவாரணம் அண்மையில் வழங்கப்பட்டது.

 கொலன்னாவை அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில்; கொலன்னாவை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான சாசோலைகளை பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் வழங்குவதைப் படத்தில் காணலாம்.


இந்த இரண்டாவது கட்டத்தில் 36 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 7144 வீடுகளுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படவுள்ளன. இதன் முதலாவது கட்டமாக அக்டோபர் 22ம் திகதி பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அலரி மாளிகையில் வைத்து நிவாரணங்கள் வழங்கப்பட்டன. இந்த முதலாவது கட்டத்தில் 4500 வீடுகளுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7144 வீடுகளுக்கு, இரண்டாவது கட்டத்தில் வழங்கப்பட்ட நட்டஈடு. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7144 வீடுகளுக்கு, இரண்டாவது கட்டத்தில் வழங்கப்பட்ட நட்டஈடு. Reviewed by Madawala News on 11/02/2017 06:55:00 AM Rating: 5