Kidny

Kidny

மியன்மார் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை , ரோஹிங்யாக்கள் எமது நாட்டவர்கள் அல்ல ; விரது தேரர் ..



பொது­ ­­சேனா அமைப்பின் பொதுச்­செ­­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மியன்­மார்
 கடும்போக்கு கொள்­கை­களைப் பின்­பற்றும் பௌத்த அமைப்பின் தலை­­ரான அசின் விராது தேரரை சந்­தித்து சம­கால பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­­தற்­காக கடந்த 7ஆம் திகதி மியன்­மா­ருக்குப் பய­­மாகியுள்ள நிலையில்,

மியன்மார் சென்றடைந்துள்ள ஞானசார தேரர் அங்கு அசின் விரது தேரரை சந்தித்து கலந்துரையாடியதாக அங்கு சென்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 8 முதல் 13 வரை பொது­­­சேனா அமைப்பின் பொதுச்­செ­­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் உள்ளிட்ட  குழுவினருக்கும் மியன்­மாரின் கடும்போக்கு பௌத்த அமைப்பின் தலை­­ரான அசின் விராது தேரர் குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாக பொதுபல சேனா ஏற்கனவே அறிவித்திருந்தது.


மியன்மாரில் ரோஹிங்யா தீவிரவாத குழுக்களால்  பௌத்தர்கள் அந்த நாட்டு பொலிஸார் கொல்லப்பட்ட விடயங்களையும் மியன்மார் ஹிந்துக்கள் வசிக்கும் கிராமம் தீவைக்கப்பட்ட விடயங்கள்  தொடர்பில்  மேற்குல ஊடகங்கள் வாய்திறக்கவில்லை என அசின் விராது தேரர் குறிப்பிட்டதாகவும்,மியன்மாரின் வசிக்கும் மியன்மார் முஸ்லிம்கள் எதுவித பிரச்சினையுமின்றி அங்கு வாழ்ந்துவருவதாக அசின் விராது தேரர் சுட்டிக்காட்டியதாகவும் விராது தேரருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட டிலந்த விதானகே குறிப்பிடுகையில் தெரிவித்தார்.

மியன்மார் ராணுவம் முஸ்லிம்களை கொல்லுவதாக சித்தரிக்கப்படுவது மேற்குக சதி எனக் கூறியுள்ள விரது தேரர் ரோஹிங்யா ஆயுதக்குழுக்களாலேயே இந்த பிரச்சினை வெடித்துள்ளதாக குறிப்பிட்டுள்

மியன்மாரில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொதுபல சேனா குழு அங்கு மியன்மார் முஸ்லிம்கள் அமைதியான ஒரு சூழலில் வாழ்வதை காணக்கிடைத்ததாகவும் டிலந்த விதானகே மேலும் குறிப்பிட்டார்.

பௌத்த தேர­வாத கொள்­கை­களைப் பின்­பற்றும் நாடு­­ளான இலங்கை மற்றும் மியன்­மா­ருக்கு இடையில் நட்­பு­­வினை மேம்­­டுத்­துதல் மற்றும் தேவை­யான உத­வி­களைப் பரி­மா­றிக்­கொள்ளல் என்பன தொடர்பிலும்  கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுபல சேன குழு 13 திகதி நாடு திரும்புகிறது.

மியன்மார் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை , ரோஹிங்யாக்கள் எமது நாட்டவர்கள் அல்ல ; விரது தேரர் .. மியன்மார் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை , ரோஹிங்யாக்கள் எமது நாட்டவர்கள் அல்ல ; விரது தேரர் .. Reviewed by Madawala News on 11/09/2017 04:40:00 PM Rating: 5