Kidny

Kidny

8 பேர் பலியான நேற்றைய அனர்த்தத்தின் அப்டேட். (படங்கள் இணைப்பு)

(ஜே.எம்.ஹபீஸ்-)

லக்கலை அனர்த்தத்தில் பலியான 7 பேரின் சடலங்கள் இன்று  நண்பகல் (5.11.2017) வரை கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. இன்னும் ஒருவரது சடலம் தேடப்பட்டு வருகிறது.

 காலநிலை பாதிப்பு காரணமாக தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக லக்கலைப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.


நாத்தாண்டிய பிர தேசத்தைச் சேர்ந்த இரு குடும்ப அங்கத்தவர்கள் லக்கலை  ஆற்றில் நீராடியுள்ளனர். அவ்வேளையே திடீர் என வெள்ளம் புகுந்து மேற்படி 8 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இறுதியாக 4 வயது சிறுவன் ஒருவனின் சமலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தம்புல்லை வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக லக்கலைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலீஸ் பரிசோதகர் ஐ.ஜி. அமரசிங்க தெரிவித்தார்.


தெல்கமுவ ஓயா ஒரு பகுதியான வெத்ததாபெனி எல்ல என்ற இடத்தில் 12 பேர் நீராடியுள்ளனர். அதில் என்மர் பலியானதுடன் நால்வர் தப்பியுள்ளனர்.

இறுதியாகக் கண்டெடுக்கப்பட்ட சடலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து நான்கு கிலோ மீற்றருக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நக்கில்ஸ் மலைத் தொடருடன் தொடர்பு பட்ட சிற்றாற்றில் மழைகாலங்களில் இவ்வாறு திடீர் வெள்ளம்  ஏற்படுவதுண்டு.

8 பேர் பலியான நேற்றைய அனர்த்தத்தின் அப்டேட். (படங்கள் இணைப்பு) 8 பேர் பலியான  நேற்றைய அனர்த்தத்தின் அப்டேட். (படங்கள் இணைப்பு) Reviewed by Madawala News on 11/05/2017 03:36:00 PM Rating: 5