Kidny

Kidny

வீட்டில் தனிமையிலிருந்த 80 வயது வயோதிபப் பெண்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோட்டம். #இலங்கை


வீட்டில் தனிமையிலிருந்த 80 வயது வயோதிபப் பெண்ணை பலவந்தமாக பாலியல்
வல்லுறவுக்குட்படுத்திய 49வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ள நீதிமன்ற நீதிவான் இலங்க சிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் தம்புள்ள பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட அதிரடி விசாரணைகளை அடுத்தே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் பற்றி வருவதாவது,

குறித்த வயோதிப பெண் சுகயினமுற்ற நிலையில் வீட்டில் தனிமையிலி ருந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் மகன் வெளியே சென்றிருந்த தருணம் பார்த்து சந்தேகநபர் வீட்டினுள் நுழைந்து வயோதிபப் பெண் மீது பலவந்தமாக
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தலைமறைவாகியுள்ளார்.


வீடு திரும்பிய மகன் தாயின் அவல நிலை கண்டு தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைய டுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சுமார் 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


திருமணமாகி மனைவியை பிரிந்து பிள்ளைகளுடன் வாழும் குறித்த சந்தேக நபர் மேலுமொரு பாலியல் குற்றத்திற்காக 12 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வந்தவரென தெரியவந்துள்ளது.

மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தம்புள்ள பொலிஸார் தம்புள்ள நீதி மன்றில் ஆஜர் செய்த போதே சந்தேக நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வீட்டில் தனிமையிலிருந்த 80 வயது வயோதிபப் பெண்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோட்டம். #இலங்கை வீட்டில் தனிமையிலிருந்த 80 வயது வயோதிபப் பெண்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோட்டம். #இலங்கை Reviewed by Madawala News on 11/13/2017 10:46:00 AM Rating: 5