Kidny

Kidny

ரயில் ஊழியர்களும் 8 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்புக்கு முஸ்தீபு


ரயில் சேவையிலுள்ள பல்வேறு ஊழியர் சங்கங்களும் இணைந்து எதிர்வரும் 8 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சங்கங்கள் அறிவித்துள்ளன.


இந்நடவடிக்கையில், ரயில் சாரதிகள் சங்கம், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம், ரயில் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் ரயில் முகாமையாளர் சங்கம் ஆகியன இணையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ரயில் ஊழியர்களும் 8 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்புக்கு முஸ்தீபு  ரயில் ஊழியர்களும் 8 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்புக்கு முஸ்தீபு Reviewed by Madawala News on 11/07/2017 12:01:00 AM Rating: 5