Kidny

Kidny

இலங்கையில் திடீரென ஏற்பட்ட மோசமான காலநிலை. இதுவரையிலான சேத விபரங்கள் மற்றும் காலநிலை அப்டேட் முழு விபரம் ஒரே பார்வையில்.

நிலவும் அசாதாரண காலநிலையால், பதினைந்து பேர் தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென வீச ஆரம்பித்த காற்று, அதனுடன் கூடிய கடும் மழை என்பவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இதுவரை பதினைந்து பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரங்கள் முறிந்து விழுந்தமையால் இதுவரையில் இருவர் பலியாகியுள்ளனர். வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.

போதிய போக்குவரத்து வசதிகளை உடனடியாகப் பெற முடியாததால், பாதிக்கப்பட்ட பலர் இன்னும் மருத்துவ உதவிகளைப் பெற முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

அதேவேளை திடீரென வீச ஆரம்பித்த காற்று, அதனுடன் கூடிய கடும் மழை என்பவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இதுவரை பதினைந்து பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போதிய போக்குவரத்து வசதிகளை உடனடியாகப் பெற முடியாததால், பாதிக்கப்பட்ட பலர் இன்னும் மருத்துவ உதவிகளைப் பெற முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் மின்தடை ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் தாமதமேற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

மரங்கள் முறிந்து மின்சாரக்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்கள் மீது விழுந்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ள கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீளவழங்குவதில் தாமதமேற்பட வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலையினால் குறித்த மின்சார மீள் இணைப்பு பணிகள் தாமதமைடைந்துள்ளதாக மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் நடத்தவிருந்த இறுதித்தவணைப் பரீட்சைகளை பிரிதொரு தினத்தில் நடத்துமாறு கல்வியமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, களனிவெளி, கரையோர மற்றும் மலையகத்துக்கான ரயில் ​சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவேண்டிய, விமானங்களில் சில, மத்தலை விமான நிலையத்துக்கு திருப்பியனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த மோசமான வானிலையை அடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பல பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படகூடிய பிரதேசங்கள் தொடர்பில், மக்கள் விளிப்பாக இருக்கவேண்டுமென மீண்டும் எச்சரிக்கை செய்துள்ள அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம், அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அகுரல பிரதேசத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் சீரற்ற காலநிலை காரணமாக காரை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

குறித்த மீன் பிடி படகுகளை தேடி கடற்படையின் படகுகள் விரைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மின்பிடி படகில் 7 மீனவர்கள் வரை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஏற்கனவே உருவாகியிருந்த தாழமுக்கமானது அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக உருவாகும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இது தற்போது காலியிலிருந்து வடமேற்காக 185 கிலோமீற்றர் தூரத்திலும் கொழும்பிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது மேற்கு வடமேற்கு திசையில் மணித்தியாலத்திற்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை காணப்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இலங்கையில் திடீரென ஏற்பட்ட மோசமான காலநிலை. இதுவரையிலான சேத விபரங்கள் மற்றும் காலநிலை அப்டேட் முழு விபரம் ஒரே பார்வையில். இலங்கையில் திடீரென ஏற்பட்ட மோசமான காலநிலை. இதுவரையிலான  சேத விபரங்கள் மற்றும் காலநிலை அப்டேட் முழு விபரம் ஒரே பார்வையில். Reviewed by Madawala News on 11/30/2017 09:45:00 AM Rating: 5