Kidny

Kidny

பட்ஜட் வரப்போகுதாம்....விலைகள் குறையுமாம்....மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!!!


இப்போ ஏதாவது ஒரு பொருளின் விலை குறைக்கப்படுமாயின்....
அது நீங்கள் என்றோ ஒரு நாள் நல்லிரவில் மெய்மறந்து இலங்கை அணியின் கிரிக்கட் மெட்ச் பார்த்துக்கொண்டிருந்த பொழுதில் ஏற்றப்பட்ட விலையாக இருக்கும்.... 
அதுவும் 50 ரூபா கூட்டியிருந்தால் இப்போது 25 ரூபாவை குறைப்பார்கள்!

இன்னும் ஒரு பதட்டம் நிறைந்த நாளில் தேசமே இனக்கலவரம் உருவாகி விடுமோ என்று உறைந்து போயிருந்த கணங்களில்.....

கேசுக்கும், கிழங்கிற்கும், வாகனங்களுக்கும் என விலை ரொக்கட் வேகத்தில் ஏறியிருக்கும்!

எவ்வளவு கூடியது என்றே நம்மிடம் கணக்கு இருக்காது ஆனால் அதில் 5-10 வீதத்தை குறைத்து விட்டு இந்த வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு நிவாரணம் என்று சொல்லப்போகிறார்கள்!

அதாவது உன் பக்கட்டுல இருந்தே இரு நூறு ரூபாவ திருடிட்டு அதுல உனக்கே இருபது ரூபா தர்மம் பண்ணுறத போல .....

உண்மையில நம்ம நாட்டுக்கு என்ன நடந்திருக்கு என்று எண்ணிப்பார்த்தால்...

முன்னர் 85,000/- ரூபா விற்பனையான Scooty pep இப்போ 235,000/-...

மூணு வருசத்துக்கு முன்னால 100 ரூபாய்க்கு கிட்டவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி 150 தாண்டிருச்சி!

இதுதான் நம்ம பொருளாதாரத்தின் அழகு!

இப்போ ஏதோ ஒரு கெப்ல கூட்டுன நெத்தலிக்கருவாடு, பருப்புட விலைய அஞ்சு பத்தால அரசாங்கம் குறைப்பான்....

“அன்ன சிக்ஸ் கஹனவா” என்று தெற்கின் ஒரு மூலையில் நள்ளிரவில் வாய் பிழந்து கிடந்த அப்பாவி பாமரச்சிங்களச்சனம் “ஆண்டுவ ஹொந்தய்” என்று வாற எலக்சன்ல வாக்கு போடும்!

200% கூட்டப்பட்ட வாகன வரி 20% குறைந்தாலும் Sale காரனுக்கு கொண்டாட்டந்தான், ஏனென்றால் நிறைய வாகன சேல்களில் நீண்ட காலமாக ஈ விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

கடைசியாக....
இந்த பட்ஜட்ல கேஸுக்கு வில குறச்சா ஏமாந்திறாதிங்க!

அதுவும் இந்த ஆட்சி மாற்றத்தின் பின் குறைக்கப்பட்டு மஹிந்த காலத்தை விட மலிவாக காட்டப்பட்டு நமது கண்களை, மூளைகளை கழுவி முடித்த பின்னர் நமக்கு நிதானம் கெட்டுப்போயிருந்த பல கணங்களில் பல தடவைகள் கூட்டப்பட்டுவிட்டது!

அதில் ஒரு இரு நூறு ரூபாய் குறைந்தால் அதற்கு பெயர் மக்கள் நலன் அல்ல...

மாறாக “பிச்சை”!

- ஜூனைத் இப்ராஹீம் -
பட்ஜட் வரப்போகுதாம்....விலைகள் குறையுமாம்....மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!!! பட்ஜட் வரப்போகுதாம்....விலைகள் குறையுமாம்....மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!!! Reviewed by Madawala News on 11/09/2017 12:00:00 PM Rating: 5