Kidny

Kidny

மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி காதலனுடன் வனப் பகுதிக்குச் சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம்.


மஹியங்கனையில், மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி காதலனுடன் வனப் பகுதிக்குச் சென்ற, 17 வயதான இளம் யுவதி ஒருவரை அச்சுறுத்தி, சிலர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

மேலும், சம்பவத்தில் யுவதியின் 20 வயதான காதலனும் தாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் பதியத்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று, மஹியங்கனை - தியபான வெவ பிரதேசத்திலுள்ள வனப் பகுதிக்கு குறித்த காதலர்கள் இருவரும் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், அங்கு வந்த சிலர், அவர்களை அச்சுறுத்தியுள்ளதோடு, காதலனையும் தாக்கியுள்ளனர்.

பின்னர், யுவதியை வனப் பகுதிக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

பின்னர் வீட்டுக்கு சென்ற அந்த பெண் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்படி, விரைந்து விசாரணைகளை ஆரம்பித்த மஹியங்கனை பொலிஸார், இதனுடன் தொடர்புடையதாக கருதப்படும், 17, 18, 20, 22 மற்றும் 25 வயதான ஐந்து இளைஞர்களைக் கைதுசெய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட காதலர்கள் சம்பவம் இடம்பெற்ற தினம் தவிர்த்து, குற்றம் இழைத்தவர்களை அறிந்திராத நிலையில், மஹியங்கனை பொலிஸின் குற்றப் பிரிவு அதிகாரிகள் 12 மணி நேரத்துக்குள் சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி காதலனுடன் வனப் பகுதிக்குச் சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம். மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி காதலனுடன் வனப் பகுதிக்குச் சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம். Reviewed by Madawala News on 11/16/2017 02:24:00 PM Rating: 5